Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி அரசை எதிர்த்து ஸ்ட்ரைக் : தமிழகத்தில் பிசுபிசுப்பு வழக்கம்போல இயங்கின!

மோடி அரசை எதிர்த்து ஸ்ட்ரைக் : தமிழகத்தில் பிசுபிசுப்பு வழக்கம்போல இயங்கின!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Jan 2020 9:37 AM GMT


மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும் தமிழகத்தில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளும் இயங்குவதால் எந்த அளவிலும் பாதிப்பில்லை என உண்மை செய்திகள் கூறுகின்றன.


மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றன.


தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள், திமுகவினரே தூண்டுவதால் புதுச்சேரியில் பெரும்பாலான பஸ்கள், டெம்போக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் பல தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் தைரியத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.


என்றாலும் தமிழகத்தில் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பஸ்கள் இயக்கப்படாவிட்டால் புகார் தெரிவிக்க தமிழக அரசின் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் தவிர மற்ற பகுதிகளில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


Next Story