Top
undefined
Begin typing your search above and press return to search.

குழந்தைகளின் ஆரோக்யம்.. உலகின் எதிர்காலம் : நல்வாழ்விற்க்கான நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்க பத்து எளிய வழிகள்..!

குழந்தைகளின் ஆரோக்யம்.. உலகின் எதிர்காலம் : நல்வாழ்விற்க்கான நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்க பத்து எளிய வழிகள்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 2:53 AM GMT


துவக்க காலத்தில் குழந்தைகளிடம் ஆரோக்யமான பழக்கங்களை விதைப்பதென்பது அவர்களின் வரவிருக்கும் வாழ்நாள் மொத்தத்தின் முதலீடு. அவர்கள் உணவை தேர்வு செய்யும் விதம், உடல்ரீதியான விளையாட்டு இவையனைத்தையும் நம்மால் எளிமையான சில செயல்களின் மூலம் உருவாக்க முடியும். அதற்கான சில குறிப்புகள் இங்கே. ..
சிறந்த முன்னோடியாக இருங்கள்


குழந்தைகளுக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்றால் 24/7 முழுமையும் நீங்கள் சிறப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால நீங்கள் சரியான உணவை உண்டு, சரியான உடல் பழக்கங்களை அவர்கள் கண் முன் செய்து வந்தாலே போதும். நல்ல உணவிற்க்கும் பழக்கத்திற்க்கு நீங்கள் செய்யும் சிறப்பான பங்களிப்பு அவர்களின் மனதை நிச்சயம் தொடும். இதன் மூலம் நல்ல உணவு பழக்கம் வாழ்தலின் அஸ்திவாரம் என்கிற செய்தி மறைமுகமாகவும், அழுத்தமாகவும் சென்று அவர்களை சேரும்.
நேர்மறையாக கற்றுக்கொடுங்கள்


குழந்தைகளுக்கு தங்களால் செய்ய முடியாததை யாரேனும் சொல்ல கேட்டால் அதில் பெரிதாக ஆர்வம் வராது. எனவே அவர்களால் செய்ய இயன்ற அளவிலான பழக்கங்களாக அறிமுகப்படுத்த துவங்குங்கள். எந்த பழக்கமாக இருந்தாலும் விளையாட்டுத்தனம் மிக்கதாய் நேர்மறையான அணுகுமுறையுடன் அறிமுகப்படுத்துங்கள்.


குடும்பத்தோடு நேரத்தை சேர்ந்து செலவிடுங்கள்


குடும்பமாக சேர்ந்து நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.. அந்த நேரத்தில் ஒன்றாக சேர்ந்து நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்…. நீச்சல் பயிற்சி செய்யுங்கள், தோட்டக்கலையில் ஈடுபடுங்கள். ஒழிந்து விளையாடுங்கள். குடும்பமே சேர்ந்து ஓர் நற்பழக்கத்தில் ஈடுபடுகிற போது அது குழுந்தைகள் மனதில் ஆழ பதியும்.


இலக்குகள் நிதர்சனமானதாக இருக்கக்கட்டும்


நிதர்சனமான இலக்குகளை குழந்தைகளுக்கு அமைத்து கொடுங்கள். சின்ன சின்ன இலக்குகள் அவர்களால் எளிதல் அடையக்கூடிய இலக்குகளாக அவை இருத்தல் நலம். அதை அடைகிற போதெல்லாம் அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்துங்கள். சின்ன சின்ன வெற்றிகளும், நல்ல பழக்கத்தினால் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களும்… நம் அன்றாட நடைமுறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.
நேரக்கட்டுபாட்டை கடுமையாக கடைபிடியுங்கள்


தொடர்ச்சியான தொலைகாட்சி, வீடியோ கேம், அலைபேசியில் காணொளி காணும் பழக்கத்தை சிறுக சிறுக நிறுத்துங்கள். இப்பழக்கத்தால் தின்பண்டங்கள் உண்ணும் பழக்கம் அதிகமாகும். உடல் எடை கூடுவதற்கான வாய்ப்பு அதிகமாகும், எனவே கடுமையான நேரக்கட்டுப்பாட்டுடன் இவற்றை குழந்தைகளுக்கு அனுமதியுங்கள்.


உடல்ரீதியான விளையாட்டை ஊக்கப்படுத்துங்கள்.


உடல் ரீதியாக இயங்கி செய்யும் செயல்களை ஊக்குவியுங்கள். ஓடாதே… குதிக்காதே போன்ற வார்த்தைகளுக்கு பெரும்பாலும் குறைத்து கொள்ளுங்கள். இந்த விளையாட்டுமுறைகள் ஒடுக்கப்படுகிற போது தான் எதிர்மறை விளையாட்டுகள், பொழுதுபோக்குகளின் மீது அவர்களுக்கான ஆர்வம் அதிகரிக்கிறதை என்பதை உணருங்கள்.


அங்கீகாரத்தை அர்த்தமுள்ளதாய் வழங்குங்கள்


குழந்தைகளின் சாதனைகளை, வெற்றிகளை அங்கீகரிக்க தொலைகாட்சி, வீடியோகேம்ஸ், காணொளி, தின்பண்டங்கள் போன்றவற்றை பரிசளிக்காதீர்கள். நல்வாழ்விற்க்கு ஏதுவான, மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவர்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களை அல்லது அவர்களை இயங்க செய்யும் சூழலை அமைத்து கொடுங்கள்.


வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் சேர்ந்து உண்ணுங்கள்


எப்போது ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து உட்கார அமர்கிறோமோ.. அப்போது குழந்தைகள் தவறான உணவை உண்பதற்கான வாய்ப்பு குறைவு. பெற்றோர்கள் சமைக்கும் போதே குழந்தைகளுக்கு அதில் இடும் காய்கறிகளை காட்டி, சமைக்கு முறையை விளக்கி சமைக்கலாம். இதனால் அவர்களுக்கு உண்ணும் உணவின் பின்னிருக்கும் பெரு முயற்சியும் அதன் மதிப்பும் முழுமையாக புரியும்.


உணவுபொருட்களை படித்து தேர்வு செய்ய பழக்குங்கள்


மற்றொரு முக்கியமான விஷயம் 10 வயது கடந்த குழந்தைகளுக்கு சிறு கடைகளில் உணவுகளை தேர்வு செய்யும் போது அதன் லேபிளை பார்க்கும் பழக்கதை கற்றுக்கொடுங்கள். அதில் என்னயிருந்தால் உடலுக்கு நலம், எது உடலுக்கு கேடு, மற்றும் காலவதி ஆன பொருளா..? என இது போன்றவைகளை பார்த்து வாங்கும் பழக்கத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.


உணவை தேர்வு செய்யும் சுதந்திரத்தை வழங்குங்கள்


உணவை தாங்களாகவே தேர்வு செய்யும் சுதந்திரத்தையும்.. அந்த சுதந்திரத்தை சரியாக கையாள்வதற்கான விழிப்பையும் குழந்தைகளுக்கு கொடுத்தல் நம் கடமை. எனவே இரண்டு அம்சங்களை சரியான அளவில் அவர்களுக்குள் விதைப்போம். நல்வாழ்வு சூழ்ந்த உலகை அவர்களுக்கு பரிசளிப்போம்.


Next Story