Top
undefined
Begin typing your search above and press return to search.

வெட்கமே இல்லாமல் பொய் சொன்ன மு.க.ஸ்டாலினை தோலுரித்துக் காட்டிய பா.ஜ.க செய்தி தொடர்பாளர் S.G.சூர்யா!

வெட்கமே இல்லாமல் பொய் சொன்ன மு.க.ஸ்டாலினை தோலுரித்துக் காட்டிய பா.ஜ.க செய்தி தொடர்பாளர் S.G.சூர்யா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 6:26 AM GMT


பொய் சொல்வது, தவறான வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, ஏமாற்றுவது, ஊழல் செய்வது, அரசு பணத்தை கொள்ளையடிப்பது, இவை அனைத்தின் மொத்த வடிவம்தான் திமுக.


கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது “நகை கடனை தள்ளுபடி செய்வோம், விவசாய கடனை தள்ளுபடி செய்வோம், மாதம் 6 ஆயிரம் பணம் தருவோம்” என்றெல்லாம் அப்பட்டமாக பொய் மூட்டைகளை தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளித் தெளித்தார் மு க ஸ்டாலின். நகைக்கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்றவை, தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத திமுகவால் சாத்தியம் இல்லை என்பது தெரிந்தும், அப்பாவி மக்களிடம் ஆசை காட்டி ஏமாற்றி அதிக இடங்களில் வெற்றி பெற்றது திமுக. இதற்று முன்பு 2006 – ஆம் ஆண்டு தேர்தலின்போது “2 ஏக்கர் நிலம் தருவோம்” என்று அப்பட்டமாக பொய் சொல்லி வெற்றி பெற்ற வரலாறு திமுகவுக்கு உண்டு.


அதேபோல, இல்லாததை இருப்பதாகச் சொல்வதும், இருப்பதை இல்லாததாக சொல்வதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கைவந்த கலை.


அப்படித்தான் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் இங்கு உள்ள முஸ்லிம்களுக்கு பேராபத்து உள்ளது என்பது போன்ற மாபாதக பொய்யை பரப்பி, அப்பாவி முஸ்லீம் மக்களை பீதி அடைய செய்து வருகின்றார் மு.க.ஸ்டாலின்.


அதன் உச்சக்கட்டமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் என்றும், அந்த மாநிலங்களில் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர் என்றும் வெட்கமே இல்லாமல், செய்தியாளர்களிடம் பொய்யை பரப்பினார் மு.க.ஸ்டாலின்.


மு.க.ஸ்டாலின் இந்தப் பொய்யை பாஜக செய்தித் தொடர்பாளர் S.G. சூர்யா அம்பலப்படுத்தினார்.


இது தொடர்பாக S.G.சூர்யா கூறியதாவது:-


குடியுரிமை திருத்த சட்டம் பற்றி மக்கள் சரியாக தெரியாமல் உள்ளார்கள். தமிழ்நாட்டில் வேதனையான விஷயம் என்னவென்றால், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர்கூட குடியுரிமைசட்டம் பற்றி சரியாக தெரியவில்லை. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின், “அசாம் முதல்வர் குடியுரிமை சட்டம் வேண்டாம் என்று சொல்கிறார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குடியுரிமை சட்டம் வேண்டாம் என்கிறார். பீகாரில் நிதிஷ்குமார் வேண்டாம் என்று சொல்கிறார்” என்று கூறினார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கக் கூடிய மு.க.ஸ்டாலின் பொறுப்பில்லாமல் இப்படி பொய் பேசலாமா?


எனவே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதுவும் தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே மக்களை திசை திருப்புவதற்காக இப்படி பொய் சொல்கிறாரா? என்பதே இப்போதைய நமது கேள்வி.


இவ்வாறு S.G.சூர்யா கூறினார்.


Next Story