Kathir News
Begin typing your search above and press return to search.

முரசொலி மூலப்பத்திரத்தை குழிதோண்டி புதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி! அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!

முரசொலி மூலப்பத்திரத்தை குழிதோண்டி புதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி! அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!

முரசொலி மூலப்பத்திரத்தை குழிதோண்டி புதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி! அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 6:06 AM GMT


திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்ற உண்மை சமீபத்தில் வெளியானது. இதனை முதலில் வெளிப்படுத்தியவர் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அவருடன் தலித் சமுதாயத்தின் மூத்த தலைவரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான தடா.பெரியசாமியும், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.


இது தொடர்பாக 19.11.2019 அன்று நேரில் விளக்கமளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகாமல் அவருக்கு பதிலாக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பி வைத்தார். அவரும் முரசொலியின் மூலப்பத்திரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் சமர்ப்பிக்காமல், ஆணையத்தை மிரட்டுகிற தொனியில் ஒரு பித்தலாட்ட கடிதத்தை வழங்கிவிட்டு ஓடி விட்டார்.


அரசு தரப்பில் 1974-ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சில ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. இது இந்த நிலம் ஆதிதிராவிடரிடம் இருந்து மற்ற சமூகத்தினரிடம் கைமாறிய பிறகு உள்ள ஆவணங்கள் ஆகும். அந்த நிலத்தின் மூலப்பத்திரத்தையோ அல்லது அதற்கு நிகரான ஆதாரங்களையோ அரசு சார்பில் சமர்பிக்கவில்லை.


ஆனால் 1932-ஆம் ஆண்டிற்கான கெஜட் ஆதாரத்தை தடா.பெரியசாமி சமர்ப்பித்தார். இது தமிழக அரசிடம்கூட இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதனுடைய நகல் தமிழக அரசுக்கும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களையும் தடா.பெரியசாமி வழங்கியுள்ளார்.


இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அடுத்த கட்ட விசாரணையை 07.01.2020 அன்று டெல்லியில் உள்ள லோகநாயக் பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் அலுவலகத்தில் நடத்தியது. இதில் ஆஜராகுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.


இதற்கிடையே தேசிய பட்டியலின ஆணையத்திற்கு முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறி, மு.க.ஸ்டாலின் கோர்ட்டுக்கு ஓடினார். இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி, “தேசிய பட்டியலின ஆணையத்திற்கு, முரசொலி இடம் தொடர்பாக விசாரிக்க உரிமை உள்ளது. ஆகவே அந்த ஆணையத்தின் முன் ஆஜராகி, முரசொலி நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (மூலப்பத்திரம் உள்பட) சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.



இதன் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம், ஒரு குட்டு வைத்தது.

இந்த நிலையில், தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 7-ஆம் தேதி, டெல்லியில் உள்ள அலுவலகத்தில் தடா.பெரியசாமி ஆஜர் ஆனார். ஆனால், விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.


இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் தடா.பெரியசாமி, குறிப்பிட்டு இருப்பதாவது:-


பஞ்சமி நிலவிவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டில் சந்தேகம் உள்ளது.


முரசொலி இடம் தொடர்பாக நடைப்பெற இருந்த விசாரணை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. NCSC துணை தலைவர் முருகனுக்கு பதில் ஆணையத்தின் தலைவர் விசாரணை நடத்துவார் என்று தெரிகிறது.


தேசிய ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று மிரட்டி பணிய வைக்க திமுக முயற்சி செய்கிறது.


தமிழக அரசும், திமுக விற்கு சாதகமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான போக்கு பிற ஆக்கிரமிப்பாளர்களையும் தப்பிக்க வைப்பதாகவே அமையும்.


இதே நிலை தொடர்ந்தால் பாரத பிரதமரிடம் முறையிட்டு பட்டியல் சமூகத்தின் நில உரிமையை மீட்டிட CBI விசாரணை கேட்போம்.


இவ்வாறு தடா.பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.


கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் நடந்த விசாரணையின்போது அரசு தரப்பில் 1974-ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. திமுக தரப்பில் எந்த ஆவணங்களும், தாக்கல் செய்யப்படவில்லை.


ஆனால் தடா பெரியசாமி தரப்பில் 1932-ஆம் ஆண்டு பஞ்சமி நிலம் வழங்கியதற்கான கெஜட் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. “அந்த ஆவணத்தை அடிப்படையாகக்கொண்டு சரி பார்க்கப் போகிறோம்” என்று சொல்லித்தான் அரசுத் தரப்பினர் அவற்றின் நகல்களை வாங்கி சென்றனர். ஆனால் கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் நடந்த விசாரணையின்போது அரசு தரப்பில் புதிய ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இது முழுக்க முழுக்க திமுகவிற்கு சாதகமாக எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பட்டு உள்ளதையே காட்டுகிறது. இதைத்தான் தடா.பெரியசாமியும் சுட்டிக்காட்டியுள்ளார்.



மேலும் “சென்னை நகருக்குள் பஞ்சமி நிலம் இல்லை” என்கின்ற வாதத்தையும் முன்வைக்கிறது திமுக தரப்பு. அதோடு அதற்கு துணையாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததாக கூறுகிறது. எனவே இதில் மேலும் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம் தான் என்று முன்பு திருமாவளவன் புகார் தெரிவித்து இருந்தார்.


எனவே முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில், அடுத்த கட்டமாக அண்ணா அறிவாலய நிலம் தொடர்பான மூலப்பத்திரத்தை கேட்கும் நிலை ஏற்படும். அதை தோண்ட ஆரம்பித்தால் இன்னும் பல பூதங்கள் வெளியே வரும். எனவேதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மு.க.ஸ்டாலின் சரணாகதி அடைந்து உள்ளதாக தெரிகிறது. அவர்களுக்குள் முரசொலி நிலம் தொடர்பாக சமரசம் ஏற்பட்டு விட்டது. இதனால் முரசொலி மூல பத்திரத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையில் எடப்பாடிபழனிசாமி அரசும் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. இதைத்தான் தடா.பெரியசாமி யும் சுட்டிக்காட்டியுள்ளார்.



எனவே முரசொலி நிலம் தொடர்பான விஷயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளார். அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விலைபோகவில்லை என்பதை முரசொலியின் மூலப்பத்திரத்தை வெளியிடுவதன் மூலமே மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..

செய்வாரா எடப்பாடி பழனிச்சாமி!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News