Kathir News
Begin typing your search above and press return to search.

ஈஷா பசுமை பள்ளி திட்டத்தின் மூலம் 12,500 மரக் கன்றுகளை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்!

ஈஷா பசுமை பள்ளி திட்டத்தின் மூலம் 12,500 மரக் கன்றுகளை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்!

ஈஷா பசுமை பள்ளி திட்டத்தின் மூலம் 12,500 மரக் கன்றுகளை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 12:40 PM GMT


விழுப்புரம் மாவட்டம் பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஈஷா பசுமை
பள்ளி திட்டத்தின் மூலம் 12,500 மரக் கன்றுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் உற்பத்தி செய்த 3,000 கன்றுகளை பொதுமக்கள் மற்றும்
மாணவர்களுக்கு வழங்கும் விழா அப்பள்ளியில் இன்று (ஜனவர் 9) நடைபெற்றது. இதில்
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முனுசாமி, ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா, பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.செல்வி, தேசிய பசுமை
படை ஆசிரியர் திரு.ஜாஃபர் அலி ஆகியோர் பங்கேற்றனர்.



இவ்விழாவில் திரு.முனுசாமி அவர்கள் கிராம மக்களுக்கு மரக் கன்றுகளை வழங்கினார். பின்னர்,
அவர் பேசுகையில், “ பொதுவாக மரக் கன்றுகள் நடும் விழா என்றால், மரக் கன்றுகளை
வெளியில் இருந்து வாங்கி வந்து நடுவார்கள். ஆனால், இங்கு மாணவர்களே சொந்தமாக மரக்
கன்றுகளை உற்பத்தி செய்துள்ளனர். இது மிகவும் பாராட்டுக்குரியது. பள்ளியையே சிறு காடு
போல் மாற்றி இருக்கிறீர்கள். விழாவுக்கு கூட பந்தல் அமைக்காமல், மரத்தின் நிழலிலேயே
நடத்துவதும் வித்தியாசமாக உள்ளது. இந்த அற்புதமான திட்டத்துக்கு உறுதுணையாக இருந்த
ஈஷாவுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.



ஈஷா பசுமை பள்ளி திட்டத்தின் மூலம் 12,500 மரக் கன்றுகளை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்!



ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ரப்யா பேசுகையில், “தமிழகத்தில்
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் கல்வியை
அனுபவப்பூர்மாக வழங்குவதற்காக ஈஷா பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம்
மாணவர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகளை வழங்குகிறோம். குறிப்பாக, மாணவர்கள்
தங்கள் பள்ளிகளில் நர்சரி அமைத்து மரக் கன்றுகளை உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கிறோம்.



ஈஷா பசுமை பள்ளி திட்டத்தின் மூலம் 12,500 மரக் கன்றுகளை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்!



இத்திட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் 2014 முதல் 2017 வரை செயல்படுத்தினோம். பின்னர்,
அந்தந்த பள்ளி மாணவர்களே இதை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பாக்கம்
அரசு பள்ளி மாணவர்கள் இதில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுவரை 12,500
மரக் கன்றுகளை உற்பத்தி செய்து உள்ளனர். நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை பள்ளியிலேயே
நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும், ஊரையும் பசுமையாக மாற்றியுள்ளனர்” என்றார்.



ஈஷா பசுமை பள்ளி திட்டத்தின் மூலம் 12,500 மரக் கன்றுகளை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்!



ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் சார்பில் கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி, புதுச்சேரி,
சேலம், விழுப்புரம், காஞ்சிரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் சுமார் 3,000 பள்ளிகளுக்கு
பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 46 லட்சம் மரக் கன்றுகள் மாணவர்கள் மூலம் உற்பத்தி செய்து
நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News