Top
undefined
Begin typing your search above and press return to search.

குமரி மாவட்டம், மீண்டும் பா.ஜ.கவின் கோட்டையாக மாறியது! அதிக இடங்களை கைப்பற்றி சாதனை!

குமரி மாவட்டம், மீண்டும் பா.ஜ.கவின் கோட்டையாக மாறியது! அதிக இடங்களை கைப்பற்றி சாதனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 8:36 AM GMT


தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், பாஜகவிற்கு மிகுந்த செல்வாக்கு உடைய மாவட்டம். இந்த மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை ஈட்டி கன்னியாகுமரி மாவட்டம், மீண்டும் பாஜகவின் கோட்டை என்பதை நிரூபித்து உள்ளது.


மொத்தம் உள்ள 111 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 31 கவுன்சிலர்களை பாஜக பெற்றிருந்தது. இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டிருந்த குருந்தன்கோடு ஒன்றிய ஊராட்சியின் 5-வது வார்டு வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜகவை சேர்ந்த சுகந்தி வெற்றி வாகை சூடினார். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதேபோல 11 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களில் 6 இடங்களை பாஜக அணியே அதிகம் பெற்றுள்ளது.


இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 எம்எல்ஏக்களும் திமுக-காங்கிரஸ் அணியை சேர்ந்தவர்களே. பாராளுமன்ற உறுப்பினரும் அதே அணியை சேர்ந்தவர்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. திமுகவுக்கு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பூஜ்ஜியம் என்பது திமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசும் மாவட்டம் முழுவதும் பரவலாக தோல்வியையே தழுவி உள்ளது.


ஆனால் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதோடு, பாஜகவின் ஆதரவில் போட்டியிட்ட அதிமுகவும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.


இதனால் கன்னியாகுமரி மாவட்டம் மீண்டும் பாஜகவின் கோட்டையாக உருவெடுத்துள்ளது.


Next Story