Top
undefined
Begin typing your search above and press return to search.

21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாது!

21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 1:12 PM GMT


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் மாட்டுப்பொங்கலன்று தொடங்குகிறது, ஜல்லிக்கட்டுக்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் அவனியாபுரம்,பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, இந்நிலையில் இந்த ஆண்டு மாடுபிடி வீரர்களுக்கு உடல் மற்றும் மருத்துவ பரிசோதனை தேதிகள் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.



அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 10-ஆம் தேதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 11 ஆம் தேதி பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்யும் உடல் தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார் பங்கேற்பு மாடுபிடி வீரர்கள் 21 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் 21 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Next Story