Top
undefined
Begin typing your search above and press return to search.

போட்டி இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, பாலியல் வழக்கில் சிக்கினார்! கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு!

போட்டி இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, பாலியல் வழக்கில் சிக்கினார்! கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 11:46 AM GMT


அகில இந்திய அளவில், “இந்து மகாசபா” மிகவும் பிரபலமான அமைப்பாக இருந்து வருகிறது. இந்த அமைப்பில் சுதந்திர போராட்ட வீரர், வீர சாவர்க்கர் முதல் ஏராளமான தன்னலமற்ற தலைவர்கள் இருந்து இந்து மதத்திற்கும், இந்து மக்களின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைத்து வந்துள்ளனர்.


இந்து மகாசபா அமைப்பைப் போன்று பல போலி இந்து அமைப்புகள் அவ்வப்போது தோன்றி மறையும். அதுபோன்ற ஒரு அமைப்பை சென்னையை கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டன் என்பர் தொடங்கியுள்ளார். இதற்கு “அகில இந்திய இந்து மகாசபா” என்று பெயர் வைத்துள்ளார், ஸ்ரீ கண்டன். இதற்கு தலைவரும் அவரே.





இவர் மீது அதே அமைப்பை சேர்ந்த பெண் நிர்வாகி நிரஞ்சனி என்பவர், பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த சில மாதங்களாக ஸ்ரீ கண்டன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுது வந்தார். அவர் என்னை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தார். இதனால் நான் ஸ்ரீ கண்டன் தலைமையிலான அகில இந்திய இந்து மகாசபா அமைப்பில் உள்ள எனது பொது செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்தேன். ஆனாலும் அவர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதனைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story