Top
undefined
Begin typing your search above and press return to search.

விபத்துக்குள்ளாகவில்லை.. வீழ்த்தப்பட்டது : உக்ரைன் விமான விபத்தில் திடுக்கிடும் திருப்பம்.!

விபத்துக்குள்ளாகவில்லை.. வீழ்த்தப்பட்டது : உக்ரைன் விமான விபத்தில் திடுக்கிடும் திருப்பம்.!

MuruganandhamBy : Muruganandham

  |  10 Jan 2020 2:56 AM GMT


உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாக அவசியம் இல்லை. அது ஏவுகணை தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்கா கனடா நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.


ஏவுகணை தாக்குதலில் விமானம் விழுந்து நொறுங்கியதாக பல்வேறு உளவு பிரிவுகள் தகவல் தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் 82 ஈரானியர்கள், 63 கனடர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியை தரமாட்டோம் என்று ஈரான் கூறி வருவதால் சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.


கடைசி வரை விமானத்தில் இருந்து எந்த உதவியும் கோரப்படவில்லை என்பதால், தொழில்நுட்ப கோளாறால் விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


அமெரிக்கா இடையேயான மோதலில், தவறுதலாக அமெரிக்க விமானம் என்று நினைத்து உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


Next Story