Top
undefined
Begin typing your search above and press return to search.

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! ஆசிரியர்களை கைது செய்த காவல்துறை!

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! ஆசிரியர்களை கைது செய்த காவல்துறை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jan 2020 8:03 AM GMT



தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே உள்ள ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவிக்கு அதே பள்ளியில் வரலாறு ஆசிரியர்களாக பணிபுரியும் வராலாறு பட்டதாரி ஆசிரியர்களான லட்சுமணன் (38), சின்னமுத்து (34) ஆகிய இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.


மேலும் தலைமை ஆசிரியர் முருகேசன் பார்வையற்றவர் என்பதால் ஆசிரியர்கள் இருவரும் தன் மனம் போன போக்கில் பள்ளிக்கு குடிபோதையில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்
இந்நிலையில் மாணவியின் செல்போனுக்கு காதல் கவிதைகள், ஆபாசமான வார்த்தைகள் மற்றும் ஆபாச சித்திரங்களை அனுப்பி வந்துள்ளனர் வெளியே யாரிடமாவது சொன்னால் உன் வாழ்க்கை சீரழித்து விடுவேன், மதிப்பெண் குறைத்து விடுவேன் என மிரட்டியதால் இது பற்றி மாணவி வீட்டில் சொல்லமால் மறைத்து வந்துள்ளார்.


மேலும் நேற்று ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவியிடம் எல்லை மீறி நடக்க முயற்சி செய்துள்ளனர் விபரீதத்தை புரிந்து கொண்ட மாணவி  தன் தாயிடம் நடந்தவற்றை கூறி உள்ளார் இந்த விஷயம் ஊர்மக்களுக்கு தெரிய வரவே ஆத்திரம் அடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளிக்கு சென்று   இரண்டு ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.







தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


பொதுமக்கள் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இரண்டு ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவியை பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்க்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
புகார் மீது உரிய விசாரணை நடத்தி
இரண்டும் ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்தார்.


சில மாதங்களுக்கு முன்னர் தான் அருகே பாலக்கோடு அருகே உள்ள
மல்லுபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இதே போன்று பாலியல் புகார் சம்பவம் நடந்தது குறிப்பிடதக்கது.


Next Story