Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை!

இந்தியா - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பைத் தொடர்ந்து  தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jan 2020 12:31 PM GMT


வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார் என்றும் அப்பொழுது இருநாட்டு அமைச்சர்களும் பொருளாதார வளர்ச்சியை, இருநாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர் என்றும் தெரிவித்தார்.


மேலும் இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்கள் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது என்றும் இதையடுத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன விரைவில் இந்திய மீனவர்கள் 15 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்ததாக கூறினார் மேலும்  அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பித் தரப்படும் என்று உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.




Next Story