Top
undefined
Begin typing your search above and press return to search.

பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அமைச்சர் ஜெயக்குமார் சசிக்கலாவை தாக்கி பேட்டி!

பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அமைச்சர் ஜெயக்குமார் சசிக்கலாவை தாக்கி பேட்டி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jan 2020 5:45 AM GMT


தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு ..


தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று காலை 9 மணிக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கியது. மாலை 6மணி வரை வழங்கப்படுகிறது. மேலும் இன்று தொடங்கி 13ம் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.


ரூபாய் ஆயிரத்துடன் பொங்கல் தொகுப்பு.


தமிழக அரசின் அறிவித்தலின்படி 1000 ரொக்க பணம் இரண்டு 500 தாள்களாகவும், கரும்பு துண்டு, சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய்,முந்திரி உள்பட பொங்கல் வைக்க தேவையான பொருட்களும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் தினசரி 250 முதல் 300 பேருக்கு தெரு வாரியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் கார்டு இல்லையெனில் :


மின்னணு குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) மூலமாகத்தான் பொங்கல் பரிசு வழங்கப்படும். ஸ்மார்ட்கார்டு இல்லை என்றால் அந்த குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அடையாள அட்டையை காண்பித்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் கடவு எண்ணை அடிப்படையாக வைத்தோ பொங்கல் பரிசை பெறலாம்.
இன்றுபொங்கல் பரிசு வழங்கிய உடன் குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். பொங்கல் பரிசு வாங்கியதை உறுதி செய்யும் வகையில் ஒப்புதல் படிவத்தில் வாங்கயவரிடம் கையெழுத்து வாங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் சுமார் 2.5 கோடி அரசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.2363 கோடியை ஒதுக்கி உள்ளது.


அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:


சென்னை இராயபுரத்தில் உள்ள கூட்டறவு அங்காடியில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி தொடங்கி வைத்தார்.


பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேருக்கு தினசரி வழங்கப்படுகிறது.


பொதுமக்கள் காலையிலேயே வர வேண்டாம். இரவு 7 மணி வரை வழங்கப்படுவதால் பொறுமையாக வந்து வாங்கி செல்லுங்கள். பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.


பணம் பாதாளம் வரை பாயும் :


“தர்பார் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று கூறினார் .இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் அதே சமயத்தில் திரைப்படங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.


பிகிலும் தர்பாரும் ஒன்று தான் :


மேலும் விஜய் நடித்த பிகில் திரைப்படத்திற்கு ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்பார் படத்திற்கு 4 நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்விக்கு எங்களைப் பொருத்தவரை தர்பாரும் ஒன்றுதான் பிகிலும் ஒன்றுதான் என்று கூறினார்.


ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 7 ஆயிரம் தியேட்டர்களில் தர்பார் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Next Story