Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவிற்கு காரில் 18 கிலோ கஞ்சா கடத்திய மர்ம நபர்கள்! போலீசார் பறிமுதல்!

கேரளாவிற்கு காரில் 18 கிலோ கஞ்சா கடத்திய மர்ம நபர்கள்! போலீசார் பறிமுதல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jan 2020 9:28 AM GMT


கேரளாவிற்கு காரில் கடத்திய 18 கிலோ கஞ்சாவை கம்பம் போலீசார் பறிமுதல்
செய்தனர். அது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. அங்கு அதிக விலைக்கு
விற்கப்படுவதே காரணம். எனவே ஆட்களை சம்பளத்திற்கு அமர்த்தி கார்களை கொடுத்து கஞ்சா வாங்கிவர ஏற்பாடுசெய்கின்றனர்.நேற்று கம்பமெட்டு ரோட்டில் இன்ஸ்பெக்டர்
சிலைமணி, எஸ்.ஐ., விநோத்ராஜா, ரவிதலைமையிலான போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.






அப்போது கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தினர். அதில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்தபோலீசார், காரின் பின் இருக்கையை சோதித்தனர். அதன் கீழ் பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்தமறைத்து வைத்திருந்த பெட்டியில் 18 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுபறிமுதல் செய்யப்பட்டது.





இது தொடர்பாக அதில் பயணம் செய்த எர்ணாகுளத்தை சேர்ந்த விஜூ 46, நிஜித் 43 ,ஆகிய
இருவரையும் கம்பம் வடக்கு போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தகஞ்சாவின் மதிப்பு கம்பத்தில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம்,கேரளாவில் ரூ. 7 லட்சத்து 20 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டது.


Next Story