Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டு! – காங்கிரஸ் எம்.எல்.ஏ பகீர்!

புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டு! – காங்கிரஸ் எம்.எல்.ஏ பகீர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 10:33 AM GMT


புதுவை பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆளும் காங்கிரஸ் அரசு மீதும், முதல்வர் நாராயணசாமி மீதும், அமைச்சர்கள் மீதும் பரபரப்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.


இதுதொடர்பாக எம்எல்ஏ தனவேலு கூறியதாவது:-


ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்தால் அந்த தகவல் கட்சியின் தலைமைக்கு தெரிவிக்கப்படும். அப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான சஞ்சய்தத் புதுவைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.


நட்சத்திர விடுதியில் தங்கும் அவருக்கு அமைச்சர்கள் இரவில் சிற்றின்பத்திற்கு பெண்களை ஏற்பாடு செய்வார்கள். இதனையடுத்து சஞ்சய்தத், தான் எந்தப் பணிக்காக வந்தோம் என்பதையே மறந்துவிடுவார். அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்.


பாப்ஸ்கோவில் பெயரளவில்தான் நான் சேர்மனாக இருந்தேன். சேர்மனுக்கு அதிகாரம் இல்லை என கூறி விட்டதால், நான் அலுவலகத்திற்கு செல்வது இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் 6 முறை மட்டும்தான் அலுவலகம் சென்றேன்.


அதிலும் ஆயுத பூஜைக்கு படைப்பதற்காக 3 முறை சென்றுள்ளேன். பாப்ஸ்கோ கியாஸ் நிறுவனத்திடம் 40 ஆயிரம் கியாஸ் இணைப்புகள் இருந்தது. இந்த இணைப்புகளில் தற்போது 25 ஆயிரம் இனைப்புகள் அமைச்சரின் மகன் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.


விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கேவி டெக்ஸ் நிறுவனத்தின் கட்டிடத்தை கவர்னர் கிரண்பேடி முடக்கினார். இந்த கட்டிடம் தற்போது திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.


இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு பணம் கைமாறி உள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் என் கைவசம் உள்ளன. இதுகுறித்து நகர குழும உறுப்பினர் செயலரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினேன்.


 அவர் மிகவும் பயத்துடனும், பீதியுடனும் என்னிடம் பேசினார். நான் கேவி டெக்ஸ் நிறுவனத்தை திறக்க கையெழுத்திட மாட்டேன் என்னை மாற்றி விடுங்கள் என அமைச்சரிடம் கூறியிருப்பதாக என்னிடம் கூறினார்.




https://youtu.be/epBTRqpBZxg


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த குடும்பம் நேருவின் குடும்பம். அந்த குடும்பத்தினர் தியாக தலைவர்கள். பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல்காந்தி தலைவர் பதவியை விட்டு ஒடினார்.


அப்போது மூத்த தலைவர்களின் செயல்பாடுகளால்தான் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தது என கூறினார். அந்த மூத்த தலைவர்களில் நாராயணசாமியும் ஒருவர்.


நேரு குடும்பத்தின் பெயரைக்கூறி கொள்ளையடிக்கின்றனர். நாராயணசாமி 2021 வரை முதல்ராக நீடித்தால் புதுவையிலும் காங்கிரஸ் வீழ்ச்சியடையும்.


இவ்வாறு தனவேலு எம்எல்ஏ கூறினார்.


Next Story