Top
undefined
Begin typing your search above and press return to search.

விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கேரளாவில் வெடிவைத்து தகர்ப்பு!

விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கேரளாவில் வெடிவைத்து தகர்ப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 11:22 AM GMT


கேரள மாநிலம் கொச்சியில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கடலோர விதி, சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட இருப்பதால் அவற்றை இடிக்க கேரள அரசு முடிவு செய்தது இதை எதிர்த்து குடியிருப்பு நிறுவனங்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாநில அரசின் முடிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது அதைத் தொடர்ந்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.



 கேரள அரசின் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டதை அடுத்து காவல் துறையின் மேற்பார்வையில் இன்று விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது நவீன முறையில் வெளி வைக்கப்பட்டு அடுக்குமாடி  2 கட்டிடம் நொடிப் பொழுதில் இன்று தகர்க்கப்பட்டுள்ளது மற்ற அடுக்கு மாடி கட்டிடங்கள் நாளை தகர்க்கப்படும் என்று மாநகராட்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.


Next Story