Top
undefined
Begin typing your search above and press return to search.

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலையை கண்டித்து இந்து அமைப்புகள் அமைதி ஊர்வலம்! மு.க.ஸ்டாலின் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை!

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலையை கண்டித்து இந்து அமைப்புகள் அமைதி ஊர்வலம்! மு.க.ஸ்டாலின் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 1:01 PM GMT


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, ப.சிதம்பரம் மற்றும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள‌ கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டிக்கவில்லை. கோடூரமாக படுகொலை செய்யப்பட்ட வில்சனின் குடும்பத்தினருக்கும் அவர்கள் ஆறுதல் தெரிவிக்க வில்லை.


ஆனால் பாஜக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே வில்சன் படுகொலையை கண்டித்தன.






இந்த நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளை கண்டித்து களியக்காவிளையில் இந்து அமைப்புகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு இருந்து இந்த பேரணி புறப்பட்டது. களியக்கவிளை பஸ் நிலையம் அருகே நிறைவு பெற்றது.





இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் பேரணிக்கு தலைமை தாங்கினார். விஷ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் காளியப்பன், பாஜக கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவர் அரசு ராஜா, பாஜக மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் செல்லன், பாஜக மாவட்டத் தலைவர் முத்து கிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களின் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.


ஊர்வலம், களியக்கவிளை பேருந்து நிலையத்தை அடைந்ததும், அங்கு படுகொலை செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கண்டன கூட்டமும் நடந்தது. அப்போது வில்சனை படுகொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளை உடனே கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்திப் பேசினர்.


Next Story