Top
undefined
Begin typing your search above and press return to search.

குமரி மாவட்ட எஸ்ஐ வில்சன் படுகொலை: கொத்து கொத்தாக சிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள்! ரவுண்டு கட்டி விசாரிக்கும் போலீசார்!

குமரி மாவட்ட எஸ்ஐ வில்சன் படுகொலை: கொத்து கொத்தாக சிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள்! ரவுண்டு கட்டி விசாரிக்கும் போலீசார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 9:15 AM GMT


குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வில்சன் (வயது 57)மர்ம நபர்களால் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை நேரில் தனது கண்ணால் பார்த்த களியக்காவிளை காவல் நிலைய எஸ்.ஐ. ரகுபதி இது பற்றி புகார் அளித்துள்ளார். வில்சன் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்த பின் சோதனை சாவடி அருகே உள்ள மசூதியின் சுவர் ஏறி குதித்து ஓட்டமும் பின் நடையுமாக இருவர் சிரித்தபடி செல்வது பதிவாகி உள்ளது. இருவரும் நாகர்கோவில் இடலாக்குடியைச் சேர்ந்த தவுபிக் 27; திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் 29, என்பது தெரிய வந்தது.
இவர்களும் பெங்களூரு, டில்லி மற்றும் குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. தங்கள் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதால் தவுபிக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் வில்சனை சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரால் ஆட்டி வைக்கப்படுபவர்கள். அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு ஐ.எஸ். இயக்கம் குறி வைத்துள்ளது. தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு பலன் அளிக்காததால் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளின் பட்டியலில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம், வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளதாகவும், முதல் தாக்குதலை கேரளாவில் நிகழ்த்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மேற்கண்ட தகவல்களை போலீசார் கூறியுள்ளனர்.


மூவரிடம் கிடுக்கிப்பிடி!
தென் மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், ''எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, குற்றவாளிகளை, தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசார் இணைந்து தேடி வருகிறோம். விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது; அதற்கு தகுந்த பலனும் கிடைத்துள்ளது,'' என்றார்.
இதற்கிடையே, கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் பதுங்கியிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த அப்பாஸ் மற்றும் சையது; திருவனந்தபுரம் பூத்துறையைச் சேர்ந்த ரபீக் ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்களிடம், இரு மாநில போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அறியப்பட்ட 14 தீவிரவாதிகளில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு துப்பாக்கி, வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவர்களில் மூன்று பயங்கரவாதிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து 'கியூ' பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் இந்து தலைவர்களைக் கொன்ற தலைமறைவாக இருந்த அல்-உம்மா தீவிரவாதிகள் சிலர் பிடிபட்டுவருவதாகவும், டெல்லி, பெங்களூர், குஜராத்தில் பதுங்கியிருந்த அவர்களை விரைவில் தமிழகம் கொண்டு வந்து விசாரிக்க உள்ளதாகவும் பலதகவல்கள் வெளியாகும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.


source: தினமலர்


Next Story