Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி போலீஸ் விசாரணையில் இடதுசாரி அமைப்பின் முகமூடி கழற்றப்பட்டுள்ளது - ஸ்மிருதி ராணி!

டெல்லி போலீஸ் விசாரணையில் இடதுசாரி அமைப்பின் முகமூடி  கழற்றப்பட்டுள்ளது - ஸ்மிருதி ராணி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 5:29 AM GMT


டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5ஆம் தேதி முகமூடி அணிந்த ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி குற்றவியல் போலீஸார், இந்த சம்பவம் குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டனர் மேலும் இடதுசாரி அமைப்புகள் தான் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டினார்,மேலும் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேரில் ஒருவர் பல்கலைக்கழக இடதுசாரி மாணவர் சங்கத் தலைவி ஐஷ் கோஷ் எனவும் தெரிவித்தனர்.



இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிதிராணி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  இடதுசாரி அமைப்புகளின் முகமூடி  கழற்றப்பட்டுள்ளது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தி  வரி செலுத்துவோரின் பணத்தை வீணாக்க வதாகவும் பல்கலைக் கழகங்களை அரசியலுக்காக இடதுசாரிகள் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார், இடதுசாரி அமைப்புக்கள் புதிய மாணவர்களை பதிவு செய்ய விடாமல் தடுத்துள்ளனர் என்றும் டெல்லி போலீசார் விசாரணையில் வன்முறையில் இடதுசாரிகள் தான் ஈடுபட்டனர் என்று மக்களுக்குத் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.




https://twitter.com/smritiirani/status/1215602467305590785?s=19



Next Story