Top
undefined
Begin typing your search above and press return to search.

“சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மறைவிற்கு கண்டனம்கூட தெரிவிக்க மு.க.ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை” – பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

“சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மறைவிற்கு கண்டனம்கூட தெரிவிக்க மு.க.ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை” – பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 11:34 AM GMT


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, ப.சிதம்பரம் மற்றும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள‌ கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டிக்கவில்லை. கோடூரமாக படுகொலை செய்யப்பட்ட வில்சனின் குடும்பத்தினருக்கும் அவர்கள் ஆறுதல் தெரிவிக்க வில்லை.


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-


களியக்காவிளையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தனி நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இது தமிழக காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல்.


ஒன்றுமில்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கி தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் போராட்டங்களை எல்லாம் நடத்தின. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக போன்ற கட்சிகளுடன் பயங்கரவாதிகளும் கூட்டணியில் உள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சிறு சம்பவம் நடந்தாலும் அதனை சட்டப்பேரவையில் பெரிய பிரச்சினையாக பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அதிகாரி முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பற்றி வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மறைவிற்கு கண்டனம்கூட தெரிவிக்க அவருக்கு மனம் வரவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.


இதனை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். வரும் காலங்களில் அவர்கள் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.


இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story