Top
undefined
Begin typing your search above and press return to search.

ஓமன் சுல்தான் கபூஸ் பின் சையத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

ஓமன் சுல்தான் கபூஸ் பின் சையத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 10:59 AM GMT


ஓமன் நாட்டின் சுல்தானான கபூஸ் பின் சையத் நேற்று தனது 79வது வயதில் இயற்கை எய்தினார், நவீன மயமான ஓமன் நாட்டை உருவாக்க இவரது  பங்கு மிக முக்கியமானது, வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சியாளராக இருந்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு, கபூஸின் மறைவிற்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 



இந்நிலையில், ஓமன் சுல்தான் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் காலமானதைப் பற்றி அறிந்ததும் நான் மிகவும் வேதனை அடைகிறேன்.


அவர் ஓமனை நவீனமான மற்றும் வளமான தேசமாக மாற்றியவர் என்று புகழ்ந்துள்ளார் மேலும் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான நட்புணர்வை வளர்ப்பதற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்கினார். சுல்தான் காபூஸ் இந்தியாவின் உண்மையான நண்பராகவும் இருந்தார்,அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என தெரிவித்துள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1215827702780854274?s=19

Next Story