Kathir News
Begin typing your search above and press return to search.

தனித்துவமாக இருப்பது எப்படி? சக்சஸ்புல் ஆய்வாளர் சொன்ன சுவாரஸ்ய பதில்..!

தனித்துவமாக இருப்பது எப்படி? சக்சஸ்புல் ஆய்வாளர் சொன்ன சுவாரஸ்ய பதில்..!

தனித்துவமாக இருப்பது எப்படி? சக்சஸ்புல் ஆய்வாளர் சொன்ன சுவாரஸ்ய பதில்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jan 2020 2:47 AM GMT


மருத்துவத்தில்
முக்கிய ஆய்வுகளை செய்து வந்தார் ஆய்வாளர் ஒருவர். அவரை பத்திரிக்கையாளர் பேட்டி
கண்டனர். . சராசரி மனிதர்களை விட தனித்துவமாக சிந்திக்கிறீர்களே இது உங்களுக்கு
எப்படி சாத்தியப்பட்டது. ? எந்த ஒன்று
மற்றவர்களிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்தியது?


அதற்கு அந்த
ஆய்வாளர் பதிலளித்தார்.


“நான் இருக்கும் இன்றைய நிலைக்கு என் ஐந்து வயதில் நேர்ந்த சம்பவம் தான் காரணம். எங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியிலிருந்து ஒரு பாட்டில் பாலை எடுத்த அருந்த முனைந்தேன். என் கையிடரி அந்த பாட்டில் கிழோ விழுந்து உடைந்துவிட்டது. எங்கள் வீட்டு சமையலறையெங்கும் ஒரு வெண்கடல் போல ஒரு பாட்டில் பால் சிதறி கிடந்தது.


அப்போது அங்கு வந்த என் அம்மா என்னை திட்டுவார், அல்லது ஏதாவது அறிவுரை கூறுவார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ "மகனே, எத்தனை அற்புதமான ஒரு தவறை நீ செய்திருக்கிறாய். நான் இத்தனை பாலை இப்படி சிதறி கிடந்த ஒரு காட்சியயை பார்த்ததேயில்லை. எப்படியோ தவறு செய்துவிட்டாய்...? இதை சுத்தம் செய்வதற்க்கு முன்பு கொஞ்ச நேரம் இதிலிறங்கி விளையாடுகிறாயா? என்று கேட்டார்.


எத்தனை
வித்தியாசமான பார்வை என் அம்மா எனக்கு காட்டியது. அன்று என் அம்மா என்னிடம்
கேட்டவுடன் நான் பாலில் இறங்கி விளையாடினேன். அதன் பின் மீண்டும் என் அம்மா
தொடர்ந்தார் "நீ எப்போதெல்லாம் இதை போல் தவறு செய்கிறாயோ, பதட்டப்படாதே. அந்த தவறிலும் நீ
மகிழ்ச்சியாக இருக்க எதாவது சின்ன சின்ன வாய்ப்புகள் இருக்கும். அதை அனுபவிக்கப்பார்.
அதே நேரம், உடனடியாக அந்த தவறை
சரி செய்து சீர் செய்து கொள்ளும் வழியையும் கண்டுபிடித்துவிடு" என பால்
சிந்திய அத்தரையை சுத்தம் செய்தவாறே சொன்னார்.


மேலும், "உனக்கு பாட்டிலில் பாலை பிடித்து குடிக்க தெரியவில்லை அதனால் தவறவிட்டுவிட்டாய். ஒரு முறை அதில் தண்ணீரை ஊற்றி தருகிறேன். எப்படி குடிக்க வேண்டும் என்று பழகிக்கொள் என கூறி எனக்கு பழக்கி கொடுத்தார்.


அந்த நொடி தான் எனக்கு தெரிந்தது தவறுகளை கண்டு அஞ்ச தேவையில்லை. தவறுகள் என்பதே புதியவற்றை கற்று கொள்வதற்கான வாய்ப்பு என்று அன்று தெரிந்து கொண்டேன். நானும் சாதராணமானவர்களை போல் தான் முயற்சிக்கிறேன். ஆனால் தவறுகள் ஏற்படும் போது தேங்கி விடாமல் அங்கே ஒளிந்து கிடக்கிற வாய்ப்பை கொணர்ந்தெடுக்கிறேன். அந்த ஒன்று என்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டலாம்! என கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு நம்பிக்கை மின்ன பதிலை சொன்னார் அந்த ஆய்வாளர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News