Top
undefined
Begin typing your search above and press return to search.

தேசவிரோத முழக்கம் எழுப்புபவர்கள் நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: அமித்ஷா பேச்சால் எதிர்க்கட்சிகளிடையே பீதி!

தேசவிரோத முழக்கம் எழுப்புபவர்கள் நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: அமித்ஷா பேச்சால் எதிர்க்கட்சிகளிடையே பீதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2020 11:54 AM GMT



குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் நாடு முழுக்கப் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனாலும் எள்ளளவும் இந்த சட்டத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்ததுடன் தங்கள் நிலையில் தெளிவாக உள்ளனர்.


இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தப் போவதில்லை என எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுகள் கூறியதை அடுத்து நேற்று முன்தினம் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.


அந்த அறிவிப்பில்” வரும் ஜனவரி மாதம் 10- ந்தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டம் எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் இது கட்டாயம் என்றும் அறிவித்தது.


இந்த நிலையில் செயல்படுத்த மாட்டோம் என பா.ஜ.க அல்லாத சில மாநில அரசுகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்ற நிலையில்


நேற்று ஜபல்பூரில் நடைபெற்ற பேரணியில் அமித் ஷா பேசுகையில் “‘‘நாட்டுக்கு எதிராக தங்கள் சொந்த சுய நலன்களுக்காக தேசவிரோத முழக்கங்கள் எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.


மேலும் "நான்கு மாதங்களில் வானுயர ராமர் கோயில் கட்டப்படும். சில அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் தேச விரோத முழக்கங்களை எழுப்புகிறார்கள். யார் தேச விரோத முழக்கங்கள் எழுப்பினாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. ராமர் கோயில் கட்டப்படுவதைத் தடுத்துப் பாருங்கள் என காங்கிரசுக்கு சவால் விட்டார். மேலும் புதிய குடியுரிமை சட்டம் எந்த இந்திய குடிமகனின் குடியுரிமையாவது பறிக்கிறது என எதிர்கட்சிகளால் நிரூபிக்க முடியுமா எனவும் கேட்டார்.


மேலும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், தேசத்தைத் தவறாக வழிநடத்தி சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகின்றன. காங்கிரஸ் கட்சிதான் நாட்டை மதரீதியாகப் பிளவுபடுத்தியது. அங்கு, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை.பாகிஸ்தானில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி காங்கிரஸ் கட்சி ஏன் பேச மறுக்கிறது. பா.ஜ.க கொண்டுவருகிற அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்றே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.


வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தான் மற்றும் இம்ரான்கானின் குரலாகப் பேசுகின்றன. மக்களின் எண்ணங்களை சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக அழிந்துவிடும்" என்றார். அமித் ஷாவின் இந்த அதிரடிப் பேச்சு, எதிர்கட்சியினரை பீதியடையச் செய்துள்ளது.



Next Story