Top
undefined
Begin typing your search above and press return to search.

அதிகரிக்கும் பதற்றம் - இராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஈரான்.!

அதிகரிக்கும் பதற்றம் - இராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஈரான்.!

MuruganandhamBy : Muruganandham

  |  13 Jan 2020 2:58 AM GMT


ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரான் ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்க படை தளத்தை அழித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கா பதிலடி தாக்குதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்கள் போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார்.


இந்த நிலையில், இராக் தலைநகா் பாக்தாதில் அமெரிக்கப் படை நிறுத்தப்பட்டுள்ள அல்-பலாத் விமானப் படை தளத்தில் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இராக் ராணுவம் தெரிவித்தது. 8 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் விமானப் படை அதிகாரிகள் இருவா், விமானிகள் இருவா் என 4 போ காயமடைந்தனா்.


ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இராக்கில் உள்ள இரு இடங்களில் அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து இதேபோன்ற தாக்குதலை சமீபத்தில் ஈரான் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா போர் மோகத்தை விடுத்து சமாதானத்துக்கு வந்துள்ள நிலையில், ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.


Next Story