Top
undefined
Begin typing your search above and press return to search.

அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி - செங்கோட்டையன்!

அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி - செங்கோட்டையன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2020 10:13 AM GMT



ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மங்கலம் குழுமத்திற்கு சொந்தமான பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று தகவலை தவறாக வாட்ஸ்அப் மூலமாக பரப்பும் நிலைமையை பார்க்க முடிகிறது என்றும் ஆக அவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்குமா என்பதை நாம் ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும் ஏனென்றால் மதிய உணவு வழங்குவதற்கு அனைத்தும் பணியாளர்களை அழைத்து வந்து அந்தப் பணிகளை செய்வதற்கு தான் நேரம் இருக்கிறது என்றும் காலை உணவு வழங்கப்படும் என்ற செய்தி உண்மையில்லை, வெறும் வதந்தி என்றும் அமைச்சர் கூறினார்.



Next Story