Top
undefined
Begin typing your search above and press return to search.

தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமா தமிழகம்? கொந்தளிக்கும் பொன் ராதாகிருஷ்ணன்!

தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமா தமிழகம்? கொந்தளிக்கும் பொன் ராதாகிருஷ்ணன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2020 2:34 AM GMT


பா.ஜ.க-வின் அமைப்பு தேர்தல் பணிகளை மேற்பார்வையிட அரியலூர் சென்றார் பொன் இராதாகிருஷ்ணன். அப்போது தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும், முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா காலத்தில் இருந்தே இதை தான் மீண்டும் மீண்டும் கூறி வருவதாகவும் தெரிவித்தார். தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தமிழக இஸ்லாமியர்கள் கேரளா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலகங்களில் சமீபத்தில் கைது செய்யப்படுவது தனது குற்றச்சாட்டை உறுதி படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மேலும், தீவிரவாதிகளால் கன்னியாகுமரியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கவில்லை, இது தொடர்பாக அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்க வில்லை என்றும், சிறுபான்மையினர் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன என்றும் கொந்தளித்தார்.


Next Story