Top
undefined
Begin typing your search above and press return to search.

கணவர் பல் துலக்குவது இல்லை, குளிப்பது இல்லை! துர்நாற்றத்தால் டைவர்ஸ் கேட்டு கோர்டில் பெண் மனு!

கணவர் பல் துலக்குவது இல்லை, குளிப்பது இல்லை! துர்நாற்றத்தால் டைவர்ஸ் கேட்டு கோர்டில் பெண் மனு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2020 12:39 PM GMT



தன் கணவர் பல் துலக்குவது கூட கிடையாது என்றும் குளிப்பதும் ரொம்ப குறைவு என்றும் இதனால் ஏற்படும் துர்நாற்றத்தை தன்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறி பீகாரை சேர்ந்த ஒரு பெண் மணவிலக்குக் கேட்டு மனு செய்து இருக்கிறார்.


பீகாரில் உள்ள வைஷாலி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த சோனி தேவி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிஷ் ராம் என்பவருக்கும் சென்ற 2017ல் திருமணம் நடந்தது.


திருமணம் நடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஒரு நாள் கூட தன்னுடைய கணவர் ஒழுங்காகக் குளித்ததில்லை, பல் துலக்கியதில்லை என்றும் இதனால் ஏற்படும் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ளமுடியவில்லை என்றும் தன்னுடைய மணவிலக்கு மனுவில் அந்த மனைவி குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் அவர் முகத்தை கூட மழிக்காமல் கரடு முரடாக தாடி வளர்ப்பதாகவும், பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூட தன் கணவருக்கு சுத்தமாகத் தெரியவில்லை என்றும் பீகார் மாநில பெண்கள் ஆணையத்தில் மனைவி புகார் தெரிவித்து உள்ளார்.


மனுவை விசாரித்த ஆணையம், கணவர்-மனைவி இருவரிடமும் விளக்கம் கேட்டு உள்ளது. கணவர் மண விலக்கை விரும்பவில்லை என தெரிவித்தார். இதை அடுத்து 60 நாட்களில் பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கணவரிடம் ஆணையம் வலியுறுத்திக் கூறி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.


Next Story