Top
undefined
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணனின் மலையில், 114 அடி உயர ஏசு சிலை! அடிக்கல் நாட்டினார், காங்கிரஸ் தலைவர்! கொந்தளித்த இந்துக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது!

கிருஷ்ணனின் மலையில், 114 அடி உயர ஏசு சிலை! அடிக்கல் நாட்டினார், காங்கிரஸ் தலைவர்! கொந்தளித்த இந்துக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2020 8:24 AM GMT


கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே உள்ளது ஹரோபெலி மலை பகுதி. இந்த பகுதி கிருஷ்ண பரமாத்மாவின் மண் என்று அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்த மலையில் 114 அடி உயர ஏசு சிலை அமைக்க காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான பி.கே.சிவகுமார் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஏற்பாடு செய்தார். சமீபத்தில் அவர் அதற்கான அடிக்கல் நாட்டினார். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டுவரும், கிறிஸ்தவ மிஷனரி கும்பல்கள் பின்புலத்தில் இருந்து சிவகுமாரை இயக்கியது. அவரும் காங்கிரசின் கிறிஸ்தவ ஆதரவு நிலைபாட்டின்படி இந்த சிலை அமைப்பதற்கு இடம் ஒதுக்கியது முதல், அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்து முடித்து, கடந்த கிறிஸ்துமஸ் அன்று அடிக்கல்லும் நாட்டினார்.


இது அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்களை கொதிப்படையச் செய்தது. பொங்கி எழுந்து அவர்கள் 114 அடி ஏசு சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.


அந்தப் பகுதி பொதுமக்களும், இந்து அமைப்பினரும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தினர். கனகபுரா நகரில் இந்த பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இந்து அமைப்பு தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த பேரணி அங்குள்ள தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் கிறிஸ்தவ மத மாற்ற கும்பல்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. கிருஷ்ணனின் பூமியில் ஏசு சிலை வைக்க அடிக்கல் நாட்டிய காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.





இதனைத்தொடர்ந்து ஏசு சிலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதோடு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கியது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


வழக்கம்போல இந்துக்கள் தூங்கிக்கொண்டுடிருப்பார்கள் என்று நினைத்தார் காங்கிரஸ் தலைவர் சிவகுமார். ஆனால் இந்துக்கள் கொதித்து எழுந்தவுடன் அவர் பல்டி அடித்து உள்ளார்.


“அந்தப் பகுதியில் 114 அடி உயர ஏசு சிலை அமைப்பது என்னுடைய முடிவு அல்ல. அது கிறிஸ்தவர்கள் எடுத்த முடிவு. எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால் என்னை அழைத்தார்கள். நான் சென்று அடிக்கல் நாட்டினேன். மற்றபடி இயேசு சிலை அமைப்பதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று பல்டி அடித்தார் சிவகுமார்.




https://twitter.com/ReddyMurali6677/status/1216646935211167744

Next Story