Top
undefined
Begin typing your search above and press return to search.

இனி போலீஸ் அதிகாரிகளின் அனுமதியுடன் தான் வாட்சப் குரூப்பை உருவாக்க முடியும்?

இனி போலீஸ் அதிகாரிகளின் அனுமதியுடன் தான் வாட்சப் குரூப்பை உருவாக்க முடியும்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2020 6:35 AM GMT


சமூக வலைத்தளங்கள் பல குற்றங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உயிர் பறி போயிருக்கிறது. வாட்சப்பில் பகிரப்படும் வதந்திகளை உண்மை என்று நம்பி பலர் அதை பார்வேர்ட் செய்கின்றனர். இதனால் கலவரம் கூட உருவாகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய-மாநில அரசுகள் பல முயற்சிகளை செய்கின்றன.


வாட்சப் நிறுவனமும் பல மாற்றங்களை செய்து வருகின்றது. குரூப்பில் சேர மற்றும் வெளியேற பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ஐந்து செய்திகளை மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும் என்று கிடுக்கிபுடி போடப்பட்டுள்ளது.


காஷ்மீர் மாநில அரசு ஒருபடி முன்னே சென்று உள்ளது. வாட்சப் குரூப்பை உருவாக்க வேண்டும் என்றால் காவல் நிலையத்திற்கு சென்று அந்த குரூப் யாருடையது? யார் அதில் இருப்பார்கள்? குரூப்பின் நோக்கம் என்ன ? என்ற விவரங்களை கொடுத்து, அதை அவர்கள் பரிசீலித்து, அனுமதி அளித்த பின்தான்
தொடங்க முடியும். பிற மாநிலங்களும் இதை பின்பற்றவேண்டும்.


Next Story