Top
undefined
Begin typing your search above and press return to search.

கார்த்திக் சிதம்பரத்திடம் வேலை பார்த்தவரே அவர் வழக்கை விசாரிக்கும் நீதிபதியா? மத்திய வக்கீலின் ஆட்சபனையை அடுத்து வேறு நீதிபதிக்கு வழக்கு மாற்றம்!

கார்த்திக் சிதம்பரத்திடம் வேலை பார்த்தவரே அவர் வழக்கை விசாரிக்கும் நீதிபதியா? மத்திய வக்கீலின் ஆட்சபனையை அடுத்து வேறு நீதிபதிக்கு வழக்கு மாற்றம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2020 8:47 AM GMT



நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசித்திரமான அதே சமயம் நீதிதேவதையின் கண்களை இருட்டடிக்கும் நிகழ்ச்சி ஓன்று நடைபெற இருந்தது, மத்திய அரசின் வக்கீல் சமர்த்தாக அதை கண்டுபிடித்து தடுத்துவிட்டார்.


சென்னையை அடுத்த முட்டுக்காடு கிராமத்தில் உள்ள நில விற்பனை வழியாக கிடைத்த வருமானம் 7.73 கோடி ரூபாயை கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்கும் சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரிக்க முற்பட்டவர் நீதிபதி அனிதா சுமந்த். இவர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனமான அட்வாண்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் வழக்கறிஞர். அந்த பணிக்காக சிதம்பரம் குடும்பத்தாரிடம் ஊதியம் பெற்றவர்.


இந்த நிலையில் இதை தெரிந்து கொண்ட மத்திய அரசு சார்பில் வாதாடிய வக்கீல் இது குறித்து தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார். தலைமை நீதிபதி கூறியபடி நீதிபதி அனிதா சுமந்த் தனது முந்தைய நிலையை ஒப்புக் கொண்டு வேறு நீதிபதிக்கு அமர்வை மாற்ற ஒப்புக் கொண்டார். இதை அடுத்து இந்த வழக்கு வேறு நீதிபதியின் அமர்வுக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


ஆனால் இந்த விஷயத்தை தமிழக ஊடகங்கள் சிதம்பரம் குடும்பத்துக்கு விசுவாசமாக வேறுவிதமாக மாற்றிக் கூறின: இம்மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்ததாகவும் ஆனால் வேறு நீதிபதிக்கு, இந்த வழக்கை மாற்ற, நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரைத்தார் எனவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.   


SOURCE:- OPINDIA


Next Story