Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியாவில் பிங்க் பால் டெஸ்ட் தொடர் எங்கு நடைபெற்றாலும் நாங்கள் தயார் - விராட் கோலி சவால்!

ஆஸ்திரேலியாவில் பிங்க் பால் டெஸ்ட் தொடர் எங்கு நடைபெற்றாலும் நாங்கள் தயார் - விராட் கோலி சவால்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2020 5:09 AM GMT


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் பெரிய அளவில் மைதானம் வந்து பார்ப்பதில்லை. அதற்காக தான் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடைமுறைக்கு கொண்டுவந்தது ஐசிசி.


இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டி முதலில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா விளையாடியது. அதை ஆஸ்திரேலியா நடத்தியது. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் அணிகள் அனைத்தும் பிங்க் பாலில் தான் விளையாடுகிறது. ஆனால் இந்தியா ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுத்தது.


முதன்முதலாக இந்தியா கொல்கத்தாவில் வங்காளதேச அணிக்கு எதிராக பிங்க் பாலில் விளையாடியது.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பலரும் விராட் கோலியை விமர்சித்தனர்.


இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட் முதல் தொடரை விளையாடுகிறது. இந்த தருணத்தில் இந்தியா அணி கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார். அப்போது நாங்கள் தற்போது பிங்க் பால் டெஸ்ட் தொடர்க்கு தயார் என்று கம்பீரமாக சவால் விட்டார்.
நாங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் எந்த மைதானத்தில் போட்டி நடைபெற்றாலும் விளையாடுவோம். அது கப்பா (பிரிஸ்பேன்) அல்லது பெர்த் என்றாலும் சவாலுக்கு தயார் என்றார்.


மேலும் உலகின் எந்த ஒரு இடத்திலும் எந்த அணியையும் எதிர்த்து விளையாடுவோம் மற்றும் அது ஒயிட் பால், ரெட் பால், பிங்க் பால் என எதுவாக இருந்தாலும் தயார் என்றார்.


Next Story