Top
undefined
Begin typing your search above and press return to search.

தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்த வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை! சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியது!

தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்த வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை! சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Jan 2020 9:54 AM GMT



பன்னாட்டு வாணிபத் தளமாகவும், பல நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும்
சிங்கப்பூரில் ஐ.எஸ்.பயங்கரவாதம் மற்றும் இதர இஸ்லாமிய பயங்கரவாதம்
மற்றும் தீவிரவாதங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றி
கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.


இந்த நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த
இம்ரான் காசிம் (வயது 36 ) என்ற வாலிபர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ்
பயங்கரவாத அமைப்புக்கான கொள்கை பரப்பு அறிக்கைகளை அச்சிட உதவும் வகையில்,
துருக்கியில் உள்ள தீவிரவாத இயக்கம் ஒன்றுக்கு மற்றொரு வாலிபர் மூலம் பணம்
கொடுத்துள்ளார். இந்த வழக்கில் தான் நிதி உதவி அளித்தது உண்மைதான் என அவர்
ஒப்புக் கொண்டதை அடுத்து 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


2014ஆம்
ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கான கொள்கை பரப்பு
அறிக்கையை அச்சிட துருக்கியில் உள்ள ஆடவர் ஒருவருக்கு $450 அனுப்பியதாக
இம்ரான் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டப்பட்டது. முகம்மது
அல்சையத் அல்மிதான் என்ற நபரிடம் வெஸ்டர்ன் யூனியன் குளோபல் கட்டமைப்பு
மூலம் இம்ரான் பணம் அனுப்பியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது


Next Story