Top
undefined
Begin typing your search above and press return to search.

இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுத்த பள்ளி கட்டிடங்கள் ஒப்படைப்பு!

இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுத்த பள்ளி கட்டிடங்கள் ஒப்படைப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jan 2020 7:17 AM GMT



இலங்கையின் தமிழர் பகுதியில் வளர்ச்சிக்காக நரேந்திர மோடி அரசு, 24,050 கோடி ரூபாய் நிதி உதவியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 63,000 வீடுகளை கட்டி வடக்கு மாகாண தமிழர்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 47,500 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு தமிழர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. அந்த வீடுகளில் இலங்கை தமிழர்கள் மறு குடியமர்த்தும் பணி தற்போது நடந்து வருகிறது.


இதேபோல வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு 27 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. அதில் 20 பள்ளி கட்டிட பணிகள் நிறைவு பெற்று விட்டன. 5 பள்ளி கட்டிடங்கள், வடக்கு மாகாண நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் வடக்கு மாகாண கவர்னர் பி.எஸ்.எம்.சார்லஸ், இலங்கைக்கான இந்திய துணை தூதர் வினோத் கே.ஜேக்கப் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தனர்.


இலங்கையிலுள்ள தமிழர்களுக்கான நரேந்திர மோடி அரசின் உதவிக்கரம் தொடர்கிறது.


Next Story