Top
undefined
Begin typing your search above and press return to search.

“வட்டி கடனுக்கு ஈடாக, முஸ்லிமாக மதம் மாற்றும் கொடுமை இலங்கையில் நடக்கிறது” – வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பகீர் தகவல்!

“வட்டி கடனுக்கு ஈடாக, முஸ்லிமாக மதம் மாற்றும் கொடுமை இலங்கையில் நடக்கிறது” – வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பகீர் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jan 2020 11:12 AM GMT


உலகம் முழுவதையும் முஸ்லிம் மத மாற்ற வேண்டும் என்று பல அரபு நாடுகள் பணத்தை அள்ளி வீசி வருகின்றன. இதைப்போல உலகம் முழுவதையும் கிறிஸ்தவ நாடுகள் ஆக மாற்ற வேண்டும் என்று பல ஆயிரம் கோடி பணத்தை ஆண்டு தோறும் கிறிஸ்தவ நாடுகள் செலவிட்டு வருகின்றனர்.


இந்த இரு மதத்தவர்களும் போட்டி போட்டு பல்வேறு வகைகளில் மதம் மாற்றும் வேலையை அரங்கேற்றி வருகின்றனர். அவை நாட்டுக்கு நாடு அணுகுமுறையில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.


இந்தியாவில் இந்து மதத்தில் உள்ள ஜாதி ஏற்றத்தாழ்வுகளை காரணமாக காட்டியும், வறுமை, ஏழ்மையை காரணமாக காட்டியும், பணத்தாசை பெண்ணாசையை காட்டியும் மதம் மாற்றுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.


முஸ்லிம் மதத்திற்கு இந்துக்களை மதம் மாற்றுவதற்காக “லவ் ஜிகாத்” என்ற நாடகக் காதலை முஸ்லிம்கள் அரங்கேற்றி வருகின்றனர். இப்படி மதம் மாறும் பெண்களை அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் என்ற சர்வதேச முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்து அந்தப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தும் வருகின்றனர். இந்தியாவில் “லவ் ஜிகாத்” பாதிப்பில் கேரளா மாநிலம் முதலிடம் வகிக்கிறது.


இலங்கையில் உள்ள இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றுவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வந்துள்ளனர். அதில் ஏழைகளுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து, பின்பு அவர்கள் பணத்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது, அதனை பயன்படுத்தி முஸ்லிம்களாக மதம் மாற்றும் கொடுமை அரங்கேறி உள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை, இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் சென்னை வந்த அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-






இலங்கை மட்டக்களப்பு பகுதியில் முஸ்லிம்கள் நிலச்சுவான்தார்களாக உள்ளனர். அவர்களிடம் இந்துக்கள் வேலை செய்பவர்களாக உள்ளனர். அப்படி இருப்பவர்கள், தங்களுக்கு பணம் தேவைப்படும்போது அந்த முஸ்லிம் முதலாளியிடம் வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். முஸ்லிம்கள் வட்டிக்கு விடக்கூடாது என்று இருந்தாலும், இந்த ஏழை மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர். அந்த வட்டி குட்டி போட்டு இருபதாயிரம், முப்பதாயிரம், ஐம்பதாயிரம், அறுபதாயிரம் என்று வந்துவிடும். ஒருகட்டத்தில் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத நிலை அவர்களுக்கு ஏற்படும். அந்த நேரத்தில் “நீங்கள் எங்களுடைய முஸ்லீம் மதத்திற்கு மாறினால், அந்த பணத்தை நீங்கள் தர வேண்டாம்” என்று கூறி, பலரையும் மதம் மாற்றி வருகின்றனர்.


இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.


இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Next Story