Top
undefined
Begin typing your search above and press return to search.

மாமல்லபுரம் உட்பட்ட நாடு முழுவதும் உள்ள 17 முக்கிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு - பிரகலாத்சிங் பட்டேல்!

மாமல்லபுரம் உட்பட்ட நாடு முழுவதும் உள்ள 17 முக்கிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு - பிரகலாத்சிங் பட்டேல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jan 2020 9:22 AM GMT


டெல்லியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில் இந்தியா முழுவதும் உள்ள 17 முக்கிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறோம், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது என்றார், இதில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம், கர்நாடகத்தில் ஹம்பி, தாஜ்மஹால், கஜூராஹோ கோவில்கள், மகாராஷ்டிராவின் அஜந்தா, எல்லோரா  உட்பட்ட இடங்கள் அடங்கும் என்று கூறினார்.



 அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பு அக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுற்றுலா அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் அதன் காரணத்தால் தான்  இ-விசா நடைமுறைகள் எளிமையாக்கபட்டது என்றும் 2019ஆம் ஆண்டு 2018 ஆம் ஆண்டு விட சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இன்கிரிடிபில் இந்தியாவின் தூதர் யார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு எங்களது தூதர் பிரதமர் நரேந்திர மோடி தான் என அமைச்சர் கூறினார்.



Next Story