Top
undefined
Begin typing your search above and press return to search.

மகர சங்கராந்தி அன்று கேரள அரசு மாட்டுக்கறி பிரச்சாரம்! ரம்ஜான் அன்று பன்றிக்கறி பிரசாரம் செய்வீர்களா? - கொதித்தெழுந்த இந்துக்கள்!

மகர சங்கராந்தி அன்று கேரள அரசு மாட்டுக்கறி பிரச்சாரம்! ரம்ஜான் அன்று பன்றிக்கறி பிரசாரம் செய்வீர்களா? - கொதித்தெழுந்த இந்துக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jan 2020 12:39 PM GMT


கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் இந்து விரோத செயல்களை அரசாங்கமே தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.


10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள், சபரிமலைக்கு செல்வதில்லை. இது இந்துக்களின் வழிபாட்டு நெறி முறை. இதனை தகர்த்தெறியும் வகையில் வேண்டுமென்றே வயது பெண்களை சபரிமலைக்கு அழைத்து சென்று அதன் புனிதத் தன்மையை சீர்குலைத்து சந்தோஷம் அடைந்தவர் முதல்வர் பிணராயி விஜயன்.


இப்போது இந்துக்களின் புனித பண்டிகையான பொங்கல் தினத்தன்று கேரளா அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மாட்டு இறைச்சிக்கு விளம்பரம் செய்து உள்ளது. அதாவது பொங்கல் தினத்தை கேரளாவில் மகர சங்கராந்தி பண்டிகையாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். இந்துக்களின் புனித தினமான அன்று, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுமாட்டின் இறைச்சிக்கு விளம்பரம் செய்து பிரனாயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு இந்து விரோத போக்கை பறைசாற்றி உள்ளது.


இதுதொடர்பாக கேரள அரசின் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டு உள்ளது.




https://twitter.com/KeralaTourism/status/1217403798773092352


இந்தப்பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இந்துக்கள் கொதித்தெழுந்தனர். கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். வெளிநாட்டு வாழ் இந்துக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். “இதேபோல ரம்ஜான் பண்டிகையின் போது பன்றி கறிக்கு கேரள அரசு பிரச்சாரம் செய்யுமா?” என்று கேள்வி எழப்பி உள்ளனர்.




https://twitter.com/HinduAmericans/status/1217645351248769024


கேரளாவிற்கு சுற்றுலா வர முடிவு செய்துள்ள இந்துக்கள் பலர் அதனை ரத்து செய்தனர். அவர்கள் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.


Next Story