Top
undefined
Begin typing your search above and press return to search.

“ஐந்து நாட்களுக்கு முன்பு, இலங்கையில் 12 கிராமங்களை முஸ்லிம்கள் எரித்து உள்ளனர்; 20 இந்து கோயில்களை இடித்து உள்ளனர்” – கவிஞர் காசி ஆனந்தன் பகீர் தகவல்!

“ஐந்து நாட்களுக்கு முன்பு, இலங்கையில் 12 கிராமங்களை முஸ்லிம்கள் எரித்து உள்ளனர்; 20 இந்து கோயில்களை இடித்து உள்ளனர்” – கவிஞர் காசி ஆனந்தன் பகீர் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jan 2020 6:29 AM GMT


தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், இலங்கையை சேர்ந்த கவிஞர் காசிஆனந்தன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


அங்கே (இலங்கையில்) எங்களால் வாழ முடியவில்லை. நான் எங்கும் பதிவு செய்யாத ஒரு செய்தியை சொல்கிறேன். இல்லை என்றால் நான் திசை திருப்பினேன் என்றுகூட வெளியில் சொல்வார்கள். வெளியில் சொல்ல முடியாமல் விழுங்கி கொண்டிருக்கின்ற செய்திகள் நிறைய இருக்கின்றன.


நீங்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். முடிந்தால் நாளைக்கு செல்லுங்கள். அண்மைக் காலத்தில் மிகக் கொடுமையாக நடந்தவைகளை வெளியில் சொல்ல முடியவில்லைஇ. 12 இந்து கோயில்கள், இஸ்லாமியர்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நெருப்பு வைத்து கிராமத்தோடு எரித்து உள்ளனர். அங்குள்ள இந்து மக்கள் உயிரை காப்பாற்ற ஓடியிருக்கிறார்கள். இந்த வாரம் நீங்கள் நேரில் சென்று அங்குள்ளவர்களிடம் கேளுங்கள்.


மட்டக்களப்பில், கோயில் குளம் என்ற இடத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உலக நாச்சியார் என்ற தமிழ் அரசி கட்டிய கோவில் இருந்தது. அது மிகப் பழமையான கோவில். சிங்கள மொழி தோன்றுவதற்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட கோவில் அது. இங்கே தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் தோன்றுவதற்கு முந்தைய காலத்தில் அந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒரு தமிழ் பெண் இந்து கோவிலை கட்டி இருக்கிறார்.


நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, அந்த கோவிலை இஸ்லாமியர்கள் இடித்து நொறுக்கி அங்கிருந்த, லிங்கத்தை எல்லாம் எடுத்து எறிந்து இருக்கிறார்கள். 12 ஊர்களை எரித்து நாசம் செய்து, 20 இந்து கோவில்களை உடைத்து எறிந்து உள்ளனர்.


சிங்களவர்கள் செய்வது ஒருபக்கம் முஸ்லிம்களின் செய்வது மறுபக்கம் இரண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளமாக அந்த மண்ணில் நாங்கள் இருக்கிறோம். அழிந்து கொண்டிருக்கிறோம்.


இவ்வாறு கவிஞர் காசி ஆனந்தன் நொந்துபோய் கூறினார்.






இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story