Top
undefined
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் 50 இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்! மனித உரிமை அமைப்புகள் கள்ள மௌனம்!

பாகிஸ்தானில் 50 இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்! மனித உரிமை அமைப்புகள் கள்ள மௌனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jan 2020 11:39 AM GMT


பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, வயதான முஸ்லிம் கிழவன்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து அங்குள்ள இந்து அமைப்புகள் குரல் எழுப்பிய போதும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து உள்ளது. இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்து, வயதான முஸ்லிம் கிழவன்களுக்கு திருமணம் செய்து வைப்பது மீண்டும் மீண்டும் தொடர்கதையாக அரங்கேறி வருகிறது.


பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கடந்த 15-ஆம் தேதி 15 வயது இந்து சிறுமி முஸ்லிம் மத வெறியர்களால் கடத்தப்பட்டனர். பின்னர் அந்த சிறுமி முஸ்லிம் மதத்திற்கு கட்டாயப்படுத்தி மதம் மாற்றப்பட்டு, அவளை அலி ரசா மாசி என்ற வயதான முஸ்லிம் ஆணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்த கேடுகெட்ட திருமணத்தை அங்குள்ள அம்ரோட்டி ஷாரிப் தர்காவில் நடந்துள்ளது.


இது சமீபத்தில் பாகிஸ்தானில் கடத்தப்பட்ட 50-வது இந்து சிறுமி ஆகும். இந்த 50 சிறுமிகளின் பட்டியலும் அங்குள்ள இந்து அமைப்பினர் இடம் உள்ளன.


சிறுமி கடத்தப்பட்டு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு வயதான முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த பயனும் இல்லை.


இதுதொடர்பாக அங்குள்ள இந்துக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் சமீபத்தில் கடத்தப்பட்ட 50 சிறுமிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பாக மனித உரிமை அமைப்பு உள்பட எந்த அமைப்பும், எந்த கட்சியும் குரல் எழுப்பவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.


இந்து சிறுமிகளுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை தொடருமானால் இந்துக்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அங்குள்ள இந்து அமைப்பு தலைவர் ரவி சவானி தெரிவித்துள்ளார்.


Next Story