Top
undefined
Begin typing your search above and press return to search.

254 கிலோ எடை கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தலைமை பயங்கரவாதி பிடிபட்டார்: காரில் ஏற்ற முடியாததால் லாரியில் ஏற்றி சென்ற இராக் படையினர்!

254 கிலோ எடை கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தலைமை பயங்கரவாதி பிடிபட்டார்: காரில் ஏற்ற முடியாததால் லாரியில் ஏற்றி சென்ற இராக் படையினர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jan 2020 6:00 AM GMT


உலகத்தையே இஸ்லாம் மயமாக்க வேண்டும் என்ற போர்வையில் உலக நாடுகளை பயங்கரவாத செயல்கள் மூலம் அச்சுறுத்தி வரும் இயக்கமாக ஐஎஸ்ஐஎஸ் உள்ளது. மிரட்டல் மூலம் ஆயிரக்ககணக்கான கோடி பணம் வசூலித்து தனக்கென ஒரு இராணுவப் படையையும், தலை நகரையும் இந்த தீவிரவாதிகள் உருவாக்கி வைத்திருந்தனர்.


சமீபத்தில் இவர்களின் தலைநகரான மோசூல் நகரத்தை அமெரிக்கா இராக் படைகள் மூலம் நிர்மூலம் செய்தது. ஏராளமான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளையும், அதன் முக்கியத் தலைவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் ஒழித்துவிட்டது.


இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் போதகரும், பயங்கரவாதிகளுக்கு பத்வா ( இறை கட்டளை ) கட்டளை பிறப்பிக்கும் இயக்கத்தின் மூத்த தலைவருமான ஷிஃபா அல்-நிமா அல்லது அபு அப்துல் பாரியை இராக் படையினர் சல்லடை போட்டு தேடி வந்தனர். தொடக்கத்தில் இருந்தே இகசிய இடத்தில் இருந்து பத்வா பிறப்பிக்கும் இந்த தீவிரவாதியை கண்டு பிடிக்க முடியாமல் தவித்தனர்.


இந்த நிலையில், சென்ற வியாழக்கிழமை அன்று அழிந்துபோன மோசூல் நகர பழைய கட்டிடம் ஒன்றில் இவர் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற படையினர் ஒரு படுக்கை அறையில் நடக்கக் கூட முடியாமல் 254 கிலோ எடையுடன் உடல் நலம் சரியில்லாமல் படுத்துக் கிடந்த ஷிஃபா அல்-நிமாவை கைது செய்தனர்.


அடிமைத்தனம், கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் இன அழிப்பு ஆகியவற்றை இவர் ஆதரித்து போதனை செய்யும் பழமைவாத மத போதகர் என்றும், சாதாரணமான ஒரு இஸ்லாமியனை மூளை சலவை செய்து அவனை பயங்கரவாதியாக மாற்றுவதில் இவர் கில்லாடி எனவும் கூறப்படுகிறது.


இவர் இது வரை வெளியில் தெரியாமல் இரகசிய இடங்களில் இருந்த படியே செயல்பட்டு வந்துள்ளார். இவரை கைது செய்த படையினருக்கு 254 கிலோ எடை கொண்ட இவரை காரில் ஏற்ற முடியவில்லை. வேனிலும் ஏற்றமுடியவில்லை. அதனால் பல வீரர்கள் சேர்ந்து இவரை குண்டுகட்டாக தூக்கி சிரமப்பட்டு குட்டி லாரியில் ஏற்றி சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  


SOURCE:- SWARAJYA


Next Story