Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.கவின் தேசியத் தலைவராக ஜேபி நட்டா போட்டியின்றி தேர்வு!

பா.ஜ.கவின் தேசியத் தலைவராக ஜேபி நட்டா போட்டியின்றி தேர்வு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jan 2020 9:06 AM GMT


2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் பின் பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார் இவர் தலைமையில் பாஜக அடுத்தடுத்து பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்று பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார் மேலும் உள்துறை அமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.


பின்னர் பாஜகவில் புதிதாக செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா பொறுப்பேற்றுக்கொண்டார், இதற்கிடையே பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது, போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவித்து இருந்தது எனவே பாஜகவின் செயல் தலைவராக இருக்கும் ஜேபி நட்டா வைத் தவிர வேறு யாரும் போட்டியிட விருப்ப மனு அளிக்க மாட்டார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தவிக்கின்றன எனவே அவர் போட்டியின்றி பாஜக தலைவராக உள்ளார்.


https://www.ndtv.com/india-news/jp-nadda-set-to-take-over-from-amit-shah-as-new-bjp-chief-today-2166685


Next Story