Kathir News
Begin typing your search above and press return to search.

இதெல்லாம் basic மேனர்ஸ் மக்களே !! எழுதப்படாத சமூக விதிகள்!

இதெல்லாம் basic மேனர்ஸ் மக்களே !! எழுதப்படாத சமூக விதிகள்!

இதெல்லாம் basic மேனர்ஸ் மக்களே !! எழுதப்படாத சமூக விதிகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jan 2020 3:33 AM GMT


முடிந்தால்
அனைத்தையும் கடைபிடிக்கலாம்.. அனைவரும் கடைபிடிக்கலாம்.


1. ஒருவர் அழைப்பினை ஏற்கவில்லையெனில், இரு முறைக்கு மேல் தொடர்ந்து அழைக்க வேண்டாம். அவர்களுக்கு அதைவிடவும் ஏதேனும் முக்கிய அலுவல் இருக்கும் என்பதை புரிந்து கொள்க.


2. யாரேனும், தவறுதலாக தரையில் எதையாவது கொட்டி விட்டால், புதிய உணவு வகையையோ அல்லது ஸ்பூன், கத்தி. ஃபொர்க் மற்றும் இதர உணவு உண்ணும் பொருட்களையோ எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் தடுமாறினால்
அவர்களையே வெறித்து பார்க்காதீர்கள். தவறுதலாக தும்மல், இருமல், எதிர்பாராத வாயு போன்ற விபத்துகரமான சில தருணங்களை எளிமையாக வெறித்து பார்க்காமல் எளிமையாக கடந்து செல்லுங்கள்.


3. பயன்பாட்டில் இருக்கும் கழிவறைக்கு பக்கத்தில் இருக்கும் அறையை பயன்படுத்துவதை தவிறுங்கங்கள். அது பயன்படுத்தி கொண்டிருப்பவருக்கும், உங்களுக்கும் அசெளகரியமான சூழலை உருவாக்கும்.


4. கடன் கொடுத்தவருக்கு, தான் கொடுத்தது நினைவு வரும் முன்பே திரும்ப கொடுத்துவிடுங்கள். அது ரூ. 1 ஆக இருந்தாலும் சரி
ரூ. 100 ஆக இருந்தாலும் சரி.
அது உங்கள் குணத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் செயல் என்பதை உணருங்கள். குடை, பேனா, போன்ற இதர பொருட்களுக்கும் இந்த விதி பொருந்தும்.


5. ஒருவர் உங்களை விருந்துக்கு உணவு விடுதிக்கு அழைத்து சென்றால், பட்டியலில் இருக்கும் விலை உயர்ந்த உணவை தேர்வு செய்வதை தவிருங்கள். மேலும் சூழலை எளிமையானதாக்க, அவரையே உணவை தேர்வு செய்ய சொல்லி பரிந்துரைக்கலாம்.


6. மிக விநோதமான கேள்விகளை தவிறுங்கள், “ஓ
உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? “ அல்லது “இன்னும்
சொந்த வீடு இல்லையா “ . இவையெல்லாம்
எந்த வகையிலும் உங்கள் பிரச்சனை அல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


7. நீங்கள் நண்பரோடு டாக்ஸியை பகிர்ந்து கொண்டால், இந்த முறை அவர் கட்டணம் செலுத்தினால் அடுத்த முறை நீங்கள் செலுத்துங்கள்


8. மற்றவர்களின் வேறுபட்ட அரசியல் நிலைபாட்டிற்கு மதிப்பளியுங்கள்


9. மிக முக்கியமான விஷயம் இல்லாத சூழலில், பின்னிரவில் தொலைப்பேசிக்கு அழைப்பு விடுப்பதை தவிறுங்கள்


10. ஒருவர் பேசும் பொழுது ஒரு போதும் குறுக்கிடாதீர்கள்


11. நீங்கள் ஒருவரை கேலி செய்கிறீர்கள், அதை அவர் விரும்பவில்லை என்பதை அறிந்தால். உடனடியாக நிறுத்துங்கள், அதை மீண்டும் திரும்ப செய்யாதீர்கள்


12. உங்களுக்கு யாரேனும் உதவ முன்வந்தால், நன்றி சொல்ல மறவாதீர்கள்


13. பொதுவெளியில் புகழுங்கள், தனிமையில் விமர்சனம் செய்யுங்கள்.


14. நீங்கள் ஒருவருடன் பேசி கொண்டிருக்கிறீர்கள், அவருடைய பார்வை உங்களிடம் இருந்து விலகி செல்கிறது, அல்லது அவருடைய அருகாமை உங்களிடம் இருந்து விலகுகிறது, அல்லது உங்கள் கேள்விக்கு வழக்கத்திற்கு மாறாக ஒரு வார்த்தையில் பதிலளிக்கிறார் எனில் அவருக்கு நீங்கள் பேசும் தலைப்பினை தொடர விருப்பம் இல்லை என பொருள்.


15. மற்றவர்களின் எடை குறித்த பின்னூட்டத்தை தவிர்த்திடுங்கள். அவருக்கு கூற விருப்பம் இருப்பின் அவரே அது குறித்த பேச்சை தொடங்குவார்.


16. நீங்கள் நெடுந்தூர இரயில் பயணமோ அல்லது விமான பயணமோ மேற்கொள்ள இருந்தால், அதற்கு முன்பாக ஒரு முறை குளித்துவிடுங்கள். உங்கள் அருகில் இருப்பவருக்கு சிரமம் இராது.


17. யாராவது அவருடைய அலைபேசியில் இருக்கும் ஒரு புகைப்படத்தை உங்களுக்கு காட்டினால், அதை மட்டும் பாருங்கள். முன் பின் நகர்த்தாதீர்கள்.


18. யாரேனும் உங்களிடம், மருத்துவரை காண செல்ல வேண்டும் என கூறினால் . நீ
நலமாக இருக்கிறாய் தானே என்ற ரீதியில் உங்கள் அக்கறையை வெளிப்படுத்துங்கள். ஏன், எதற்கு என்ற அடுக்கடுக்கான கேள்விகள் வேண்டாம். தங்களுடைய தனிப்பட்ட உடல் உபாதைகள் குறித்து பொது வெளியில் சொல்லும் அசெளகரியத்தை ஏற்படுதாதீர்கள். சொல்ல வேண்டிய தகவலாக இருந்தால் அவரே சொல்லுவார் என்ற புரிதலை கொள்ளுங்கள்.


19. உங்களுக்கு கீழ் பணிபுரிபவரையும், உங்கள் தலைவரையும் ஒரே விதமாக நடத்துங்கள்.


20. ஒருவரு உங்களிடம் நேரடியாக பேசும் பொழுது, நீங்கள் உங்கள் அலைபேசியை பார்த்தவாறு இருப்பது மிகவும் மரியாதையற்ற செயல்.


21. ஒருவருர் கேட்டால் அன்றி அறிவுரைகள் சொல்லாதீர்கள்


22. ஒருவர் பங்கேற்காத நிகழ்வு குறித்த திட்டமிடலை அவர் முன் செய்யவதை தவிர்கலாம்.


23. ஒருவர் காதில் ஹெட்போன் அணிந்திருக்கும் போது, அவரிடம்
பேசாதீர்கள்.


24. ஒருவரை நீண்ட காலம் களித்து சந்திக்கிற போது, அவரே தொடங்கினால் அன்றி அவருடைய வயது குறித்தோ அல்லது சம்பளம் குறித்தோ பேசாதீர்கள்


25. உங்கள் நண்பரோ, உடன் பணியாற்றுபவரோ ஏதேனும் உணவு வணங்கினால், மிக மென்மையாக மறுத்துவிடுங்கள். அதைவிடுத்து அதை முகர்ந்து பார்த்தோ அல்லது ருசித்துவிட்டோ மறுக்காதீர்கள். இது உணவு வழங்கியவரை அவமதிப்பதை போன்ற செயலாகும்.


26. ஒருவர் அவரின் இயலாமையை, நோயை குறித்து பேச த்துவங்கிற போது. நீங்கள் உங்களுடையதை பேசத்துவங்காதீர்கள்.


27. ஒருவரிடம் வெளிப்படையான மாற்றம் தெரிந்தால், உதாரணமாக : எடை ஏற்றம்/குறைவு, தலை வழுக்கை போன்றவைகள். அது அவர்கஏஎ பேசத்துவங்கினால் அன்றி நீங்கள் எந்த கேள்வியும் எழுப்பாதீர்கள். தங்களிடம் நிகழும் மாற்றத்தை நிச்சயம் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்ற புரிதலை கொள்ளுங்கள்.


28. உங்கள் குழந்தை அன்றி மற்ற குழந்தையை முத்தமிடாதீர்கள்


29. நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளாத விஷயங்களில் இருந்து தள்ளி இருங்கள். சுருங்க சொன்னால், உங்கள் வேலையை மட்டுமே பாருங்கள்


30. முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் இருக்கும் ஒவ்வொறு பதிவையும் விவாதத்திற்கான வாய்பாக பார்க்காதீர்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News