Top
undefined
Begin typing your search above and press return to search.

கே.எல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி!

கே.எல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jan 2020 9:09 AM GMT


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார் கே.எல் ராகுல். அதனால் அவர் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அப்போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து அவரின் ஹெல்மெட்டில் தாக்கியதால் வெளியேறினார்.


இரண்டாவது போட்டியில் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவர் சிறப்பாக பேட்டிங் செய்ததுடன், விக்கெட் கீப்பிங்ல் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் செய்து அசத்தினார். இதனால் மூன்றவது போட்டியில் பாண்ட் தயாராக இருந்தாலும் கே.எல் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.


இவர் விக்கெட் கீப்பராக பணியாற்றினால் மேலும் ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடியும். பேலன்ஸ் கொண்ட அணியை தேர்வு செய்ய முடியும். அதனால் அவர் விக்கெட் கீப்பராக தொடர்ந்து செயல்பட்டார் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பணிக்கு மீண்டும் வருவது சந்தேகமான விஷயம்.


Next Story