Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவில் நாடக காதல் செய்பவர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க கோரிக்கை!

கேரளாவில் நாடக காதல் செய்பவர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க கோரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jan 2020 11:30 AM GMT


கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் போது சுற்றறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் சிலர் கிறித்துவ பெண்களை குறிவைத்து திட்டமிட்டு தவறான எண்ணங்களுடன் நாடக காதலில் ஈடுபட வைக்கின்றனர்.



அமைதியை சீர்குலைக்கவும், மாற்று மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு நாடக காதல் குழுக்கள் செயல்படுவதாகவும், இது கேரளாவில் பல மடங்கு அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டது.
இது போன்ற நாடக காதல் மற்ற மதத்தினரிடையேயான உறவை (நட்பை) பாதிக்கும் என்றும், தவறான எண்ணத்துடன் திட்டமிட்டு திணிக்கும் நாடக காதலை ஏற்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நாடக காதலில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதி என்று அறிவித்து, அந்த குழுக்கள் மீது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை எடுத்து, பொது அமைதியை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.



இந்த செய்தி கேரளாவில் உள்ள பிரபல ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் சிலர் மாற்று மத பெண்களை திட்டமிட்டு நாடக காதல் செய்து திருமணம் செய்துகொள்வதாக, கடந்த சில ஆண்டுகளாக அங்கொன்றும், இங்கொன்றுமாய் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் திட்டமிட்டு, குறிப்பிட்ட சாதி பெண்களை நாடக காதல் செய்து திருமணம் செய்ய வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் இளைஞர்கள் மத்தியில் தூண்டி விடுகின்றன.
வடமாவட்டங்களில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, சொத்து அபகரிப்பு, மற்றும் சாதி மோதல்களையும் ஏற்படுத்தினர்.



அதற்கு அதே சமுதாயத்தை சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிலரின் தூண்டுதலால் நாடக காதல் செய்யும் இளைஞர்கள் சிலர், பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு தங்களது வாழ்க்கையையும் இழப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
படித்து முன்னேறுங்கள் என்றும் அறிவுறுத்தினர். ஆனால், நாடக காதலுக்கு முழு ஆதரவு தெரிவித்து கருப்பு சட்டை, சிவப்பு துண்டுகாரர்கள், சாதிவெறியின் உச்சம் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தனர்.



நாடக காதல் என்பது இல்லவே இல்லை என்றும், ஆதிக்க சாதி வெறி என்றும், ஊடகங்கள் வாயிலாகவும், திரைப்படங்கள் வாயிலாகவும் கொக்கரித்து வந்தனர்.
2014ம் ஆண்டில் நாடக காதல் திருமணங்கள் குறித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மற்றும் தீர்ப்பை வைத்து எடுக்கப்பட்டுள்ள திரௌபதி படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அப்படி வாய் கிழிய பேசிய அனைவரும், கேரளாவில் உள்ள தேவாலயம் விடுத்துள்ள எச்சரிக்கை சுற்றறிக்கையை எதிர்க்குமா? அல்லது எதிரத்துதான் பேசுவதற்கு கருப்பு சட்டை, சிவப்பு துண்டுகாரர்கள் தயாராக உள்ளனரா? இப்படி ஒன்று நடக்காதது போலவே கடந்து சென்று விடுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.


Next Story