Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒரு நாள் போட்டியில் 29-வது சதம் அடித்து ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளிய ரோகித்சர்மா!

ஒரு நாள் போட்டியில் 29-வது சதம் அடித்து ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளிய ரோகித்சர்மா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jan 2020 5:45 AM GMT


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மா சதம் அடித்தார். அந்த சதத்தின் மூலம் பட்டியலில் இலங்கை வீரர் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை கைப்பற்றினர். அந்த தொடரில் அவர் 119 ரன் எடுத்தார். அதில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடித்துள்ளார். மேலும் அந்த சதம் 29-வது சதமாகும்.


மேலும் முதல் இடத்தில் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), இரண்டாவது இடத்தில் விராட் கோலி (43 சதம்), மூன்றவது இடத்தில் ரிக்கி பாண்டிங் (30 சதம்) இருக்கிறார்கள். தற்போது நான்காவது இடத்தில் ரோகித் சர்மா (29 சதம்), மற்றும் ஐந்தாவது இடத்தில் ஜெயசூர்யா (28 சதம்) அடித்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8-வது சதத்தை (40 இன்னிங்ஸில்) பதிவு செய்தார்.


ஒரு நாட்டுக்கு எதிராக 8 சதங்கள் மேல் அடித்த இந்திய வீரர்களில் கோலி, தெண்டுல்கர்,ரோகித் சர்மா வரிசையில் உள்ளனர்.


Next Story