Top
undefined
Begin typing your search above and press return to search.

பஞ்சத்தில் பாகிஸ்தான்: அடுத்தடுத்து மூடப்படும் ஹோட்டல்கள் - தென்னிந்திய பாணியை கையிலெடுத்த பாகிஸ்தான் மக்கள்!

பஞ்சத்தில் பாகிஸ்தான்: அடுத்தடுத்து மூடப்படும் ஹோட்டல்கள் - தென்னிந்திய பாணியை கையிலெடுத்த பாகிஸ்தான் மக்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  22 Jan 2020 5:17 AM GMT


பாகிஸ்தானில் கடுமையான கோதுமை பஞ்சம் நிலவி வருவதால், அந்நாட்டு மக்கள் தென்னிந்திய பாணியிலான உணவுமுறைக்கு மாறியுள்ளனர்.


பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் கடுமையான கோதுமை பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டிய இம்ரான் கான் அரசு, எதிர்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறது.


கடுமையான கோதுமை பாற்றக்குறை காரணமாக பாகிஸ்தான் ஹோட்டல்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. மக்கள் கோதுமை சாப்பிடும் பழக்கத்தை விடுத்து, அதிக அளவில் அரிசி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.


இதற்கு பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசாங்கங்களை, இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து எதிர் கட்சிகளிடம் விசாரித்தால், மத்திய அரசு தான் சரியான நேரத்தில் உதவவில்லை என்று கூறி வருகின்றனர்.


இவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட மக்கள், இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர ஏப்ரல் மாதம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான கணிப்பை தேசிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story