Kathir News
Begin typing your search above and press return to search.

644 பயங்கரவாதிகள் சரண்! மோடி அரசின் பயங்கரவாத ஒழிபிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

644 பயங்கரவாதிகள் சரண்! மோடி அரசின் பயங்கரவாத ஒழிபிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

644 பயங்கரவாதிகள் சரண்! மோடி அரசின் பயங்கரவாத ஒழிபிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jan 2020 8:26 AM GMT


நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றது முதல் இந்தியா முழுவதும் உள்ள பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.


இதன் ஒரு பகுதியாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒழித்துக் கட்டப் பட்டனர். இதனால் பாகிஸ்தான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாச வேலையில் ஈடுபடுவது முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.


இதே போல பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளும் அடக்கி ஒடுக்கப்பட்டு உள்ளனர். வட கிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளையும் ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.



644 பயங்கரவாதிகள் சரண்! மோடி அரசின் பயங்கரவாத ஒழிபிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!


மோடி அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக பயங்கரவாதம் வெகுவாக முடிவுக்கு வந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட 8 பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 644 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர். உல்பா, என்.டி.எப்.பி, கே.எல்.ஓ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் அசாம் முதல்வர் சர்பானந்த் சோவால் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்கள் தங்களின் துப்பாக்கிகளையும் ஒப்படைத்தனர்.


இது தொடர்பாக அசாம் மாநில டிஜிபி பாஸ்கர் ஜோதி மகந்தா கூறும் போது, “8 பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் படையினர் 644 பேர் சரணடைந்துள்ளனர். அவர்கள் தங்களின் ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த பயங்கரவாதிகள் சரணடைவில் இதுதான் அதிக எண்ணிக்கையிலானது” என்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News