Top
undefined
Begin typing your search above and press return to search.

"பெரியார் பெரிய போக்கிரி" - கிழித்து தொங்கவிட்ட ஜான்பாண்டியன்!

பெரியார் பெரிய போக்கிரி - கிழித்து தொங்கவிட்ட ஜான்பாண்டியன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jan 2020 7:45 AM GMT


துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் ஈவெரா தலைமையில் நடந்த பேரணியில், இந்து தெய்வங்கள் இழிவுபடுத்தபட்டதை குறிப்பிட்டு பேசினார். அந்த சம்பவத்தை தைரியமாக துக்ளக் பிரசுரித்தது. இதனால் அந்த துக்ளக் பிரதிகள் அனைத்தும் அன்றைய கருணாநிதி அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து இந்தியா முழுமைக்கும் சோவும் பிரபலமானார், துக்ளக்கும் பிரபலம் ஆனது என்று குறிப்பிட்டு பேசினார்.


இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீரமணி, வைகோ, திருமாவளவன், ஸ்டாலின் போன்றவர்கள் வலியுறுத்தி வந்தனர்.


இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “நான் பேசியது உண்மை. ஆகவே மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை மேலும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.


இந்த நிலையில் ஈ.வெ.ரா வை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் ஜான்பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோவில் புதிய தமிழகம் கட்சி தலைவர் ஜான் பாண்டியன் கூறியதாவது:-


பெரியார், ஒரு பெரிய போக்கிரி என்று நான் சொல்லுவேன். வளர்த்த மகளை கல்யாணம் செய்வாராம். அவர் நல்லவராம். பெத்த மகளும் ஒன்றுதான், வளர்த்த மகளும் ஒன்றுதான். நான் ஒரு அனாதை பிள்ளையை எடுத்து வைக்கிறேன் என்றால், அவள் எனக்கு மகள். மருமகளும் எனக்கு மகள்தான்.


அப்படி இருக்கும்போது வளர்த்த பிள்ளையை கல்யாணம் செய்த பெரியார் யோக்கியன் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் கேவலமாக இல்லையா? இதே மாதிரி என்ற பிராமணன் தப்பு செய்து உள்ளான். சொல்லுங்கள்?





இவ்வாறு ஜான்பாண்டியன் அந்த வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story