Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்திலும், இந்திய அளவிலும் முதன் முதலாக வகுப்புவாரி இட ஒதுக்கீடு செய்தவர்கள் யார்? ஈ.வெ.ரா பெயர் எடுத்துக் கொண்டது எப்படி? ஆதாரங்களுடன் ஒரு அலசல்!

தமிழகத்திலும், இந்திய அளவிலும் முதன் முதலாக வகுப்புவாரி இட ஒதுக்கீடு செய்தவர்கள் யார்? ஈ.வெ.ரா பெயர் எடுத்துக் கொண்டது எப்படி? ஆதாரங்களுடன் ஒரு அலசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jan 2020 6:38 AM GMT


தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள்தான் இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்ததாகவும், இவர்களால்தான் பிராமணரல்லாத பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்க தொடங்கியதாகவும், அதனால்தான் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோரெல்லாம் அரசு வேலை வாய்ப்புகளை பெற்று அனுபவித்து வருவதாகவும், இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியார் செய்த போராட்டங்கள் தான் என்ற பொய்யான வாதங்கள் தமிழ் நாட்டில் எடுத்து வைக்கப்பட்டு வருகிறது.


மேலும் அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வருவதற்கும் ஈ.வெ.ரா தான் முக்கியக் காரணம் என்றும் ஒரு பொய்யான கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் பெரியார், திராவிடர் கழகம் தொடங்கி பிராமணருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பே 1920 – 1926 காலக் கட்டத்தில் மதராஸ் மாகாணம், மைசூர் மாகாணத்தில் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது என்பதை பின்வரும் புள்ளி விபர தகவல்கள் தெரியப்படுத்துகின்றன.


அந்த இட ஒதுக்கீட்டு முறையில் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாத முற்பட்டோருக்கும் தனியாக இடமளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக முதல் கட்டமாக 8.33 சதவீத தனி ஒதுக்கீடு கோரி தீர்மானம் இயற்றிய காலத்துக்கும் இது முற்பட்டது ஆகும்.


தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அமல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையில் பிராமணர் பிரிவுக்கு என அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் பிராமணரல்லாத முற்பட்டோருக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீடு முழுமையாக நீக்கப்பட்டது. பொதுப்பிரிவின் மூலம் போட்டி இட்டுத்தான் பிராமணர்கள் மற்றும் முற்பட்ட மற்ற சாதியினர் அரசு ஒதுக்கீடுகளை பெற முடியும் என்ற நிலை உருவானது. இது மட்டும்தான் பெரியாரின் பிராமண எதிர்ப்பு போராட்டங்களால் பிற்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் கிடைத்த ஒரு சிறிய நன்மை ஆகும்.


மற்றபடி பிற்பட்டோர் இட ஒதுக்கீடு எப்படி, எப்போது துவங்கியது, அதை யார் உருவாக்கினார்கள், யார் பயனடைந்தார்கள் என்பதை கீழ்கண்ட தகவல்கள் புள்ளி விபரங்களுடன் கூறுகின்றன.


பிராமணர் அல்லாதவர்களின் வேண்டுகோளை ஏற்று மைசூர் சமஸ்தானத்தின் அரசர் கிருஷ்ணராஜ உடையார் (1921) ஒரு குழுவை அமைத்தார்; அந்தக் குழுவின் பரிந்துரைப்படி வேலைவாய்ப்பில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு தந்து ஓர் ஆணையைப் பிறப்பித்தார்.


அடுத்து மதராஸ் மாகாணத்தில் டாக்டர். சுப்பராயனின் அமைச்சரவை 1926 இல் பதவியேற்றது. இவருடைய அமைச்சரவை ஸ்வராஜ்யா கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் கொண்ட அமைச்சரவை; சேதுரத்தினம் எம்.ஆர். என்ற பிராமணரும் எஸ். முத்தையா முதலியாரும் மூத்த அமைச்சர்களாக இருந்தனர். எஸ். முத்தையா முதலியார் வகுப்புரிமைக்காகக் கொண்டு வந்த அரசு ஆணை எண் 1129/15.12.1928 மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்வதாகச் சொல்லியது. இது குறித்த விவரம்:


அந்த முதல் இட ஒதுக்கீடு விபரம்:



வகுப்புஇடங்கள்
பிராமணர் அல்லாத இந்துக்கள்5
பிராமணர்கள்2
முஸ்லீமகள்2
ஆங்கிலோ இந்தியரும் கிறித்துவரும்2
தாழ்த்தப்பட்டோர்1
மொத்தம்12


இட ஒதுக்கீடு வழங்கிய அமைச்சரவையில் ஒரு பிராமணரும் இருந்தார் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.


1937இல் ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போதும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அமுல் நடத்தப்பட்டது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.


முதன்முறையாக பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு முறை


1947ல் சென்னை மாகாணத்தில் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. அந்த அரசு முதல் முறையாக பிராமணரல்லாத முற்பட்டோர், பிராமணரல்லாத பிற்பட்டோர், பிராமணர், முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர், மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குமான இட ஒதுக்கீடு தரும் ஆணையை வெளியிட்டது (21.11.1947). அதன்படி



வகுப்புஇடங்கள்
பிராமணர் அல்லாத முற்பட்டோர்44 சதவீதம்
பிராமணர்கள் அல்லாத பிற்பட்டோர்14 சதவீதம்
பிராமணர்14 சதவீதம்
முஸ்லீமகள்7 சதவீதம்
ஆங்கிலோ இந்தியர், கிறித்துவரும்7 சதவீதம்
தாழ்த்தப்பட்டோர்14 சதவீதம்
மொத்தம்100 சதவீதம்


இந்திய அளவில் இட ஒதுக்கீடு வந்தது எப்படி?


இந்திய அளவில் இட ஒதுக்கீடு எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம். சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை ஆறு பேர் கொண்ட வரைவுக் குழு உருவாக்கியது: குழுவின் தலைவர் டாக்டர். அம்பேத்கர்; சிறுபான்மைச் சமூக உறுப்பினர் முகமத் சாதுல்லா; அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி. கிருஷ்ணமாசார், கே.எம். முன்ஷி மற்றும் கோபாலசாமி அய்யங்கார் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழுவால் தயாரிக்கப்பட்ட சட்டத்தின் பிரிவுகள் 340, 16(4), 15 ஆகியவை பிற்படுத்தப்பட்டவர் மேம்பாட்டிற்காகவும், பிரிவுகள் 342, 366, 366(24), 341 போன்றைவை தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக உருவக்கப்பட்டவை. அரசியல் சட்டத்தின் 46வது பிரிவு ‘பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு மிகுந்த அக்கறையோடு நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று விளக்கம் தருகிறது வழிகாட்டல் கோட்பாடுகள் (Directive Priciples).


இந்திய அரசியல் சட்டத்தால் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை உருவாக்கியதில் முதலிடம் டாக்டர். அம்பேத்கருக்குத்தான். இருந்தாலும் அந்த அவையில் பெரும்பான்மையினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவால்தான் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.


இந்த சூழ்நிலையில் சென்னை மாகாணத்தில், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு ஒன்று 1951இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதே இந்த வழக்கின் அடிப்படை. சென்னை மாகாண அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அரசியல் சட்டத்தின் பிரிவு 29(2)க்கு எதிரானது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்சநீதி மன்றமும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.


அந்தச் சமயத்தில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஈ.வே.ரா. கிளர்ச்சி செய்தார். மாகாணமெங்கும் பரவலாக நடந்த பல்வேறு தரப்புகள் மூலம் செய்யப்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து இந்திய அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்தத் திருத்தத்தை முன்மொழிந்தவர் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த டாக்டர். அம்பேத்கர். வாக்கெடுப்பில் (01.06.1951) திருத்தத்திற்கு ஆதரவாக 243 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் பதிவாயின. இந்த அவையில் காங்கிரசார் பெருமளவில் இருந்தனர் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிரதமர் நேரு உட்பட அன்றைய அமைச்சர்கள் தீவிரமாக இருந்தனர்.


நேரு இதில் தீவிரமாக இருந்ததற்கு காரணம் தனது பதவிக்கும், தனது குடும்ப ஆட்சிமுறை விருப்பத்துக்கும் தடையாகவும், தனக்கு போட்டியாகவும் இருக்கும் தகுதி படைத்தவர்களாக பிராமணர்களே இருந்தனர். எனவே அவர்களின் செல்வாக்கை கட்டுப் படுத்தவே இந்த விஷயத்தில் அவர் தீவிரமாக இருந்தார். ஆனால் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது சாதி அடிப்படையில் பிறபடுத்தப்பட்ட அனைவருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை நாடெங்கும் கொண்டு வருவதில் மிக தீவிரமாக இருந்ததாலேயே இது அமல்படுத்தப்பட்டது.


மொத்தத்தில் அனைவரின் வாதம் இதுதான்:


1. தாழத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து போராடியவர் டாக்டர். அம்பேத்கர் மட்டும்தான் .


2. அதேபோல இந்திய அளவில் அனைவருக்குமான இட ஒதுக்கீட்டைச் சாத்தியமாக்கியது டாக்டர். அம்பேதகர்தான். அதற்கு அப்போதைய காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவு மிக முக்கியமானது.


3. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்காக ஈ.வே.ரா. தனியாக போராட்டம் எதுவும் நடத்தவில்லை.


4. இட ஒதுக்கீட்டிற்கு ஈ.வே.ரா.தான் காரணம் என்பதை ஏற்க முடியாது.


5. ஆனால் 1928ல் முத்தையா முதலியார் வெளியிட்ட அரசாணைக்கு ஈ.வே.ரா. ஆதரவு தெரிவித்தது உண்மைதான், அதே போல 1951ல் இட ஒதுக்கீட்டிற்காக அரசியல் சட்டத்திருத்தம் கோரி சென்னை மாகாணம் முழுவதும் கிளர்ச்சி நடைபெற்றபோது ஈ.வே.ரா.வின் திராவிடர் கழகமும் போராட்டம் நடத்தியது. ஆனால் ஈ.வே.ரா மட்டும்தான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு பகுதிதான்.


6. இந்த விஷயத்தில் ஈ.வே.ரா. சாதித்ததைவிட அப்போதிருந்த காங்கிரஸ் இயக்கம் மற்றும் அம்பத்கரின் ஈடுபாடு, செயல்திறன் போன்றவையால் இந்த விஷயத்தில் சாதித்தது மிக அதிகம்.


7. இதில் பெரியார் சாதித்த விஷயம் என்னவெனில் இவர் கையிலெடுத்த பிராமண எதிர்ப்பு காரணமாக இட ஒதுக்கீட்டில் இருந்து பிராமணர்களையும், பிராமணரல்லாத முற்பட்ட சாதியினரையும் விரட்டியடித்ததுதான். இதன் மூலம் பிற்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் கொஞ்சம் கூடுதல் இடங்கள் கிடைத்தது மட்டும்தான், இது ஒரு ஒரு சிறிய நன்மையாகும். மற்றபடி பெரியாரும், திராவிடக் கட்சிகளும் தான் இட ஒதுக்கீட்டு முறையை நாடு முழுவதற்கும் கொண்டு வந்தார்கள் என்பது ஒரு மாயையாகும்.


ஆகவே தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் முதன்முறையாக வகுப்பு வாரி இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர தமது ஆட்சியில் ஆதரவு தந்தவர் நாமக்கல் மாவட்டம் , குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த டாக்டர்.சுப்பராயன் அவர்கள்தான். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மகன் மோகன் குமாரமங்கலத்தின் தந்தை ஆவார். அவர் இட ஒதுக்கீட்டை மட்டும் முதன்முதலாக அமல்படுத்தவில்லை, முதன்முதலாக மது விலக்குக்கு எதிரான சட்டம், தீண்டாமை ஒழிப்பு, தலித்துகள் கோவிலுக்குள் செல்லும் உரிமை போன்றவற்றுக்கு ஆதரவாக சட்டங்கள் கொண்டு வந்தவர். இவர்தான் தமிழகத்தின் உண்மையான ஆன்மீக நம்பிக்கைகளையும், சமூக சமத்துவ எண்ணங்களைக் கொண்ட பெரியார். ஆனால் ஈ,.வே.ரா வுக்கு பெரியார் என பட்டமளித்து அவர்தான் முதல் சீர்திருத்தாவாதி என திக மற்றும் திராவிட கட்சிகள் கொண்டாடுவதற்கு காரணம் ஒருவித ஜாதி அரசியல்தான் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு தெரியும்.


டாக்டர்.சுப்பராயன் பற்றி விக்கி பீடியாவில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் ஒரு பகுதி இது:


Subbarayan was re-elected as an independent to the Madras Legislative Council in 1930. As a member of the legislature, Subbarayan was instrumental in introducing prohibition in Salem district in 1930. Prohibition was enforced in Salem till 1943 when it was scrapped by the British. In 1932, C. S. Ranga Iyer passed the Untouchability Abolition Bill in the Imperial Legislative Council.[24] On 1 November 1932, Subbarayan proposed the Temple Entry Bill which permitted low-caste Hindus and Dalits enter Hindu temples and made their prohibition illegal and punishable.[


Sources: (தமிழ் ஹிந்து – தமிழரின் தாய் மதம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் ஒரு பகுதி மற்றும் கூகிள் விக்கிப்பீடியா தகவல்கள்).


Next Story