Kathir News
Begin typing your search above and press return to search.

டோமினோஸ் விளையாட்டு கற்று தரும் இரண்டு முக்கிய பாடங்கள்.!

டோமினோஸ் விளையாட்டு கற்று தரும் இரண்டு முக்கிய பாடங்கள்.!

டோமினோஸ் விளையாட்டு கற்று தரும் இரண்டு முக்கிய பாடங்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jan 2020 3:03 AM GMT


டோமினோ
விளையாட்டை கேள்வி பட்டிருக்கிறார்களா? அதிலிருக்கும்
வாழ்க்கைகான பாடத்தை உற்று நோக்கினால் மட்டுமே ஒருவரால் கவனிக்க இயலும். நம் வாழ்வில் வரும் இன்பம் துன்பம் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை பற்றி சொல்வதற்கு அதில்
நிறைய விஷயங்கள் உள்ளன . வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் பலர்
எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரிய தொடக்கத்தை
ஏற்படுத்துவார்கள். அந்தத் தொடக்கத்தின் வலிமையும் பிரம்மாண்டமும் அவர்களுக்கு வெற்றியை தேடி தந்துவிடும் என்று
நினைக்கிறார்கள். அது உண்மையில் தவறாகும்.
இது போன்ற மனிதர்கள் வேகமாக குறிக்கோளை அடைய அடையும் முயற்சியில் தங்கள் எல்லா சக்திகளையும் இழந்து விடுகிறார்கள்.


இது
பலருக்கும் நேர்ந்த அனுபவம் தான். டோமினோ விளையாட்டு நமக்கு கற்று தரும் அழுத்தமான, வலிமையான பாடங்கள் இரண்டு.


பாடம்
1


மிகச் சிறிய செயல்களை தொடர்ச்சியாக இடைவிடாமல்
செய்யும்போது அது பெரிய சக்தியாக
உருவெடுக்கிறது. இன்றைய உலகம் உடனடியாக வெற்றி கிடைத்திட வேண்டும் என்றும்,
நினைத்த
மாத்திரத்திலேயே குறிக்கோளை அடைந்து விடவேண்டும் என்றும் துடித்துக்
கொண்டிருக்கிறது. சிறிதாக ஒரு உடற்பயிற்சி
செய்துவிட்டு எளிமையாக ஏதாவது ஒரு உணவை உட்கொண்டு விட்டு காலையில் எழும்போது சிக்ஸ்பேக்கோடு இருக்க வேண்டும் என
விரும்பினால் வாழ்வு அவ்வாறானதல்ல. சிறிய
செயலாக இருந்தாலும் இடைவெளி விடாத தொடர்ச்சி அதற்கு தேவைப்படுகிறது. செய்யும் செயல்களை அது சிறியதாக இருந்தாலும்
இடையில் கைவிடாமல் தொடர்ச்சியாக செய்து வர
வேண்டும் என்பதே முக்கியமான விதியாகும்.
உங்கள் இலக்கையும் வெற்றியையும் நீங்கள் அடைய வேண்டுமென்றால் இடைவிடாத தொடர்ச்சி
என்பது மிக முக்கியமான விதியாகும்.


தத்துவ
அறிஞர் மார்க் ட்வைன் கூற்றுப்படி
“நீங்கள் செய்யவிரும்பாத ஒன்றை சிறிது சிறிதாக செய்வதே விருப்பமற்ற
அக்கடமையை நீங்கள் நிறைவேற்றுவதற்கான வழி:


பாடம்
2


வெற்றியை
நோக்கிய முதல் அடியை சூழ்நிலையை பொருட்படுத்தாது எடுத்து வைத்துவிடுங்கள் அந்த
முதல் அடியே மற்றவர்களைப் பார்த்துக்
கொள்ளும்.... டோமினோஸ் அட்டைகள் சரியும் போது
முதல் டோமினோ அட்டையை விட அடுக்கி
கொண்டே போகும் அட்டைகளின் உயரம் பெரும் கட்டிடங்களை போல, ஏன் நிலவையே தொடும் அளவு நீண்டு கொண்டே
போகும். எனவே சூழலை பொருட்படுத்தாமல், உயரத்தை
பற்றிய பிரஞ்ஞையின்றி சிறிய அடிகளாய் எடுத்து வையுங்கள் உங்கள் வெற்றி இயல்பாய்
நிகழும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News