Top
undefined
Begin typing your search above and press return to search.

உண்மையில் பெரியார் பகுத்தறிவுவாதியா அல்லது அறிவியல் பூர்வமான அறிவில்லாதவரா ? முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜு முன் வைக்கும் நடுநிலை வாதங்கள்!

உண்மையில் பெரியார் பகுத்தறிவுவாதியா அல்லது அறிவியல் பூர்வமான அறிவில்லாதவரா ? முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜு முன் வைக்கும் நடுநிலை வாதங்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jan 2020 9:27 AM GMTசென்ற 18 தேதி தி வீக் பத்திரிக்கையில் வெளி வந்துள்ள ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜு அவர்களின் ஈ,வே.ரா பற்றிய கருத்துக்கள் இவை:


பெரியாரின் 139 வது பிறந்த தின விழா தமிழகத்தின் பல பகுதிகளில் திராவிட கட்சிகளால் கொண்டாடப்பட்டாலும், அதே சமயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்பட்ட சில பகுதிகளில் அவரது சிலையை சிலர் அவமரியாதை செய்துள்ளனர். இவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர் என்றும், இந்து சடங்குகளுக்கு எதிரானவர் என்றும், பகுத்தறிவுவாதி எனவும், பெண் விடுதலைவாதி, தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காக போராடியவர் என்றும் கருதப்பட்டார். இவரது வழி வந்த திமுக மற்றும் அதிமுக கூட தங்களது வம்சா வழியை அவர் மூலமாகக் கூறி பெருமைப் படுகின்றன.


தமிழகத்தில் உள்ள பெரும்பாலும் எந்த கட்சியும் அவரை விமர்சிப்பதில்லை. அவர் தான் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் மூலம் செய்த சில நல்ல செயல்களையும் நான் மறுக்கவில்லை, என்ற போதிலும் அவரைப் பற்றி பேசப்படும் பல கருத்துக்களுடன் பின் வரும் கருத்துக்களையும் இணைக்கிறேன்.


1. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் அரசு இந்து - முஸ்லிம் இடசியே பகைமையை மூட்டுதல், இந்துக்களிடையே சாதி மோதல்களை உருவாக்கி பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் தங்களது ஆட்சியை நடத்தினார்கள் என்பது நமக்கு நன்றாக தெரியும், பெரியார் உண்மையில் அவர்களின் முயற்சிக்கு துணை போனார். சாதிப் பிரிவினையை தூண்ட வேண்டும் என்பதற்காகவே பிராமணர்களுக்கும், அவர்களுக்கு எதிரான விஷமக் கருத்துக்களை பரப்பினார். " நீங்கள் ஒரு பாம்பையும் பார்ப்பனனையும் ஒரே சமயத்தில் பார்த்தால், முதலில் பிராமணனை கொல்லுங்கள்" . இது அவர்கூறிய பிரபலமான வார்த்தையாகும். அவரின் இது போன்ற பல மோசமான பிரச்சாரங்களால் உண்மையில் பல இடங்களில் பிராமணர்கள் தாக்கப்பட்டனர். இதனால் தமிழக பிராமணர்கள் பலர் தமிழக அரசியல் சூழ்நிலையை வெறுத்து தமிழகத்திலிருந்து வெளியேறினர்.


சமுதாயத்தை சாதி வழிகளில் பிரிப்பதன் மூலம், பெரியார் ஆங்கிலேயர்களுக்கு உதவினார். அவருடைய நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், நம் சமுதாயத்தில் தலித்துகள் இழிவாக நடத்தப்பட்டனர் (இன்னும் நடத்தப்படுகிறார்கள் ) என்பதில் மறுப்பு இருக்க முடியாது. ஆனால் அதற்கான தீர்வு பிராமணர்கள் மற்றும் பிற உயர் சாதியினருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதல்ல, மாறாக தலித்துகள் கல்வி அறிவு பெற்ற உயர் சாதி பிரிவுகளுடன் கைகோர்த்து, இந்த இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூட்டாக ஒரு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். 'இந்தியாவில் சாதி அமைப்பு' (எனது வலைப்பதிவில் சத்யம் புருயத்) பற்றி நான் ஒரு ஒரு வலைப்பதிவு இடுகையில் நான் விளக்கியது போல, சாதி அமைப்பு, அதன் தோற்றம் எதுவாக இருந்தாலும், முதலில் சாதி அமைப்பு சமூகத்தில் ஒரு நிலப்பிரபுத்துவ தொழில் பிரிவாக உருவெடுத்தது, ஒவ்வொரு தொழிலும் ஒரு சாதியாக இருந்தது. அறிவு சார்ந்த பணியில் ஈடுபட்ட சமூகத்தின் ஒரு சிறிய பகுதியாக பிராமணர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோரின் மொழி சமஸ்கிருதம்.


அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பில் உலக அளவிலான கல்வி முறை எதுவும் இல்லை, இந்தியாவில் படித்த வர்க்கம் என்பது கிட்டத்தட்ட பிராமணர்கள் மட்டுமே, ஐரோப்பாவில் படித்தவர்கள்தான் பெரும்பாலும் வழிபாட்டுத் தலங்களில் பூசாரிகளாக இருந்தனர், அவர்கள் சமஸ்கிருதம்போல லத்தீன் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதைப்போலவே பிராமணர்கள் தங்கள் அர்ச்சகர் தொழிலுக்காக இயற்கையாகவே படித்தவர்களாக இருந்தார்கள். எனவே மற்றவர்களை விட இது ஒரு ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, பிராமணர்கள் ஆங்கிலம் கற்றனர், நிர்வாகம் , நீதித்துறை, கல்வித்துறை மற்றும் பிற தொழில்களில் பிறரைக் காட்டிலும் இயற்கையாகவே அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றனர். ஆகவே, பிராமணர்கள் பிராமணரல்லாதவர்களை குறிப்பாக தலித்துக்களை கொடுமைப் படுத்தி தான் மட்டும் அறிவுபூர்வமாக முன்னேறிவிட்டார்கள் என கூறிவிட முடியாது. தலித்துகளும் மற்ற சில பிரிவினரும் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதற்கு பிராமணர்கள் மட்டும் தான் காரணம் எனக் கூறிவிட முடியாது. அதேபோல மற்றவர்களால் வேலை வாய்ப்பை பெற முடியவில்லை என்பதற்கும் வரலாற்று காரணங்கள் இருந்தன.


2. பெரியார் தன்னை ஒரு பகுத்தறிவாளர் என்று கூறிக் கொண்ட நிலையில் அவர் அறிவியல் பூர்வமாக சிந்திக்க தவறிய சில செயல்களையும் செய்துள்ளார் என்று கூறுவேன். உதாரணத்துக்கு மூடத்தனத்தை ஒழிக்கப் போகிறேன் என்ற பெயரில் 1956 இல் மெரினா கடற்கரை ஊர்வலத்தில் ‌இந்து தெய்வமான ராமர் படங்களை எரித்தது, தாக்கியது போன்ற செயல்களில் இந்து கடவுள்களின் மீது அவர் நடத்திய தாக்குதல்களில், அவர் விஞ்ஞானமற்ற மனநிலையின்மையைக் காட்டிக் கொடுத்தார். இந்த விஷயத்தில் பெரியார் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், மதத்தின் சமூக அடித்தளம் அழிக்கப்படாவிட்டால் அதை அழிக்க முடியாது ('தஸ்லிமா நஸ்ரின் தைரியமானவர், ஆனால் முட்டாள்' என்கிற எனது வலைப்பதிவு இடுகையைப் பார்க்கவும் ).


3. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும் என்று பெரியார் விரும்பினார், இந்தியா சுதந்திர நாடாக ஆவதை அவர் விரும்பவில்லை. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 1947, நாளை துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அவர் அறிவித்தார், ஏனென்றால் சுதந்திரம் பெற்றதால் திராவிடர்கள் இனிமேல் வடமாநிலத்தவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி மூலம் ஆதிக்கம் செலுத்தும் ஆரியர்களால் ஆளப்படுவார்கள் எனக் கூறினார்.


4. அவர் வட இந்தியப் பகுதிகளை ஆரியஸ்தான் என்று கூறி ஒரு சுதந்திரமான திராவிடஸ்தானை உருவாக்க முயன்றார். ஆனால் அது மட்டும் நடந்திருந்தால் ஏராளமான பொருளாதார இழப்புகளையும், தொழில் இழப்புகளையும், வள இழப்புகளையும் தமிழகம் சந்தித்து இருக்கும். ஒரு மாபெரும் பொருளாதார பேரழிவை தமிழ் நாடு சந்தித்து இருக்கும். தற்போது, கோவை, கரூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் தொழில்கள் செழித்து தங்கள் தயாரிப்புகளை பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியக மாநிலங்களில் விற்பனை செய்கின்றனர். இந்த சந்தை துண்டிக்கப்பட்டிருந்தால் அத்தகைய தொழில்களுக்கும் அவர்களின் ஊழியர்களுக்கும் என்ன நடந்திருக்கும்?


இந்த நிலையில், பெரியாரைப் பற்றிய புதிய, உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட மற்றும் யதார்த்தமான மதிப்பீட்டிற்கான நேரம் நிச்சயமாக வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன் என இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.


Next Story