Top
undefined
Begin typing your search above and press return to search.

கியூபா அருகே கரீபியன் தீவில் நித்யானந்தா! சரணடையக் கோரி இன்டர்போல் அதிகாரிகள் நீல நோட்டீஸ்!

கியூபா அருகே கரீபியன் தீவில் நித்யானந்தா! சரணடையக் கோரி இன்டர்போல் அதிகாரிகள் நீல நோட்டீஸ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jan 2020 9:40 AM GMT


இளம்பெண்கள் கடத்தல், அவர்களை கட்டாயப்படுத்தி தன்னுடன் தங்க வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நித்யானந்தாவை பிடித்து வந்து உடனே ஆஜர் படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் குஜராத் மற்றும் பெங்களூர் போலீசார் உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாடினர்.


உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நித்யானந்தாவை பிடிப்போம் எனக் கூறிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெளியுறவுத்துறை அமைச்சக உதவியுடன் பன்னாட்டு போலீஸ் அமைப்பான இன்டர்போலிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளது.


இதை அடுத்து தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட 150 நாடுகளில் உள்ள போலீஸ் அமைப்புகள் மூலம் இன்டர்போல் தேடியதில் அவர் ஈக்வடார் நாட்டில் உள்ள தீவில் தஞ்சமடைந்திருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் அங்கிருக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்ததை அடுத்து இன்டர்போல் தானாக வந்து அவர் சரண் அடையும் வகையில் தற்போது நீல நிற எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில், தற்போது கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாகக் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தகவல்கள் உறுதியானதும் சிவப்பு நிற நோட்டீஸ் அளித்து அவரை கைது செய்வோம் என இன்டர்போல் அமைப்பு கூறியுள்ளது.


தற்போது நீல நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நித்தியானந்தாவுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story